வெள்ளி, 25 ஜூன், 2010

20 பேர் கைது,செம்மொழி மாநாட்டிற்கு கண்டனம் தெரிவித்த


செம்மொழி மாநாட்டிற்கு கண்டனம் தெரிவித்த 20 பேர் கைது
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவை மாநகரில் கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது.  இன்னும் இரண்டு நாட்கள் இம்மாநாடு நடைபெறவிருக்கிறது.
முதல் நாள் மாநாட்டை குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் தொடங்கிவைத்தார்.    அரசியல் பிரமுகர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என்று பலரும் மாநாட்டிற்கு திரண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, கீரமங்கலம், வடவாளம், ஆவணம் உள்ளிட்ட பகுதிகளில் செம்மொழி மாநாடுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போஸ்டர் மற்றும் பிட் நோட்டீஸ் அச்சடித்து வெளியிடப்பட்டது.

போஸ்டர்களை பார்த்த வடகாடு போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சிவா என்ற லெனின்(32), விஜய்(27), சீராளன்(29), ஆவணம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி(33), சேந்தங்குடியைச் சேர்ந்த பகலவன்(31), பனங்குளம் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன்(35) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சிவா என்ற லெனின், முத்துசாமி, பகலவன், சௌந்தர்ராஜன் ஆகியோரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தேடிவருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியிலும் செம்மொழி மாநாட்டை எதிர்த்து போஸ்டர் ஒட்டப்படிருந்தது.  சுமை தூக்கும் பாதுக்காப்பு தொழிலாளர் சங்கத்தின் சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
நாதியற்ற தமிழர்களுக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா? என்று போஸ்டரில் வாசகம் அச்சிடப்பட்டிருந்தது.

திருச்சி காந்தி மார்க்கெட், பாலக்கரை ஆகிய இடங்களில் அதிகமாக ஒட்டப்பட்டிருந்தது.
பாலக்கரை இன்ஸ்பெக்டர் பிரபாகரன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இந்த போஸ்டர் தொடர்பாக 20 பேரை கைது செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை: