ஞாயிறு, 20 ஜூன், 2010

Finance Company நடத்தி யாழ் மாவட்ட மக்களை கொள்ளை அடித்தவர்களிடம் மாகாண சபையா?

June 20th, 2010 Save & Share
- அர்ச்சுணன்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வினை மீளமைக்கவும், நாட்டினை கட்டி எழுப்பவும் நீங்கள் முன் வரவேண்டு என்று உங்களை பணிவுடன் கேட்கின்றேன். இவ்வாறு தமிழரசு கட்சியின் பாராளமன்ற குழு தலைவரான திரு இராசவரோதயம் சம்மந்தர் அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பில் வைத்து ஊடகவியாளர்களை சந்திக்கும் பொழுது இலங்கைக்கு உதவி வழக்கும் நாடுகளிடமும், புலம் பெயர்ந்த ஈழ தமிழ் மக்களிடமும் இவ்வாறு சம்மந்தர் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த காலங்களில் புலிகள் தமிழ் ஈழம் பெற்று தருவார்கள் என்ற அதிதீவிர நம்பிக்கையோடு பெருவாரியான நிதியினை வழங்கி, வீடுகளில் வாழ்ந்து வந்த வடக்கு மக்களை காடுகளில் அலையவிட்டு,முகாம்களுக்கு அனுப்பி வைத்து பெருமை புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களில் பெரும்பாலானோருக்கு உண்டு. அந்த மக்களை மீண்டும் தமது இருப்பிடங்களில் அமர்த்துவதற்கும், அவர்களின் வாழ்வில் மீண்டும் இயல்பு நிலையினை ஏற்படுத்தவும் அந்த புலம் பெயர்ந்த மக்களே உதவவேண்டும்.

புலிகளின் பிரதிநிதிகளாக செயற்பட்ட தமிழரசுகட்சி நாடாளமன்ற உறுப்பினர்களும், புலிகளின் ஏகப்பிரதிநித்துவ கொள்கையினை ஏற்று அவர்களுக்கு நிதியுதவி வழங்கியதோடு, வடக்கு வாழ் மக்களை ஆதிகால வாழ்க்கை முறைக்கு மாற்றியவர்களாவார்கள். அந்த மக்களை மீண்டும் தமது இருப்பிடங்களில் இருந்தி தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு உள்ளது. ஆனால் தமிழரசு கட்சியினரும் , புலிகளை கொழுக்க வைத்த புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும் இதனை செய்வார்களா என்பதே ஏக்கத்துக்கு உரிய விடயமாகும்.
கடந்த நாடாளமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியினரால் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு, நாடாளமன்ற சென்ற ஒரு சிலர் , ஏழை எளிய மக்களுக்கு துன்பம் இழைத்தவர்கள் என்பதுடன்,சிலரை மனநோயாளி ஆக்கியவர்கள் ஆவார். தமிழரசு கட்சியின் நாடாளமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சரவணபவன் என்பவர், முன்னர் யாழ்மாவட்டத்தில் சப்ரா என்ற பெயரில் ஒரு பினான்ஸ் நிறுவனத்தை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களின் பணத்தினை அபகரித்தவர். இவரின் நிறுவனத்தில் பணத்தினை முதலீடு செய்த யாழ் மாவட்ட மக்கள் தாம் இருப்பு செய்த முதலீட்டையே இழந்தார்கள். இந்த மக்களின் பணத்துடன் உதயன், மற்றும் சுடரொளி பத்திரிக்கையினை நடத்தி புலிகளையும், புலிகளின் பினாமிகளான தமிழரசுக் கட்சியினரையும் புகழ்ந்து வந்தமையினால் இவர் காப்பாற்றப்பட்டார்.தமிழரசு கட்சி நாடாளமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவரும், மூத்த தலைவருமானவருமானவர் கடந்த நாடாளமன்ற தேர்தல் பிரட்சாரத்திற்காக யாழ் சென்ற போது, சரவணபவனிடம் பணத்தை பறிகொடுத்த ஒரு முதாட்டியார் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். “எலக்சன் செலவீனங்களுக்கு எண்டு லட்சம் லட்சமாக செலவு செய்யிறார், நாங்கள் குடுத்த பணத்தை தந்தால் ஒரு நேர கஞ்சியாவது நாங்கள் ஒழுங்காக குடிப்போம்,தயவு செய்து அவரிட்டை சொல்லி எங்கட காசை வேண்டி தாங்கோ” என்று அந்த பெண்மணி மூத்த தலைவரிடம் மூச்சு விட்டு அழுதுள்ளார். நீங்கள் இதனை சரவணபவனிடம் கேட்டிருக்கலாமே என்று நான் வினவிதற்கு, நான் எப்படி தம்பி இதை போய் சொல்லமுடியும் என்று கூறினார். கட்சியின் ஒற்றுமை குலைந்து விடக்கூடாது என்பதற்காக நான் இங்கு அந்த மூத்த நாடாளமன்ற உறுப்பினரின் பெயரை குறிப்பிட வில்லை.
சப்பரா என்ற பினான்ஸ் கம்பனியை சரவணபவனும் அவரின் மைத்துனரான வித்தியாதரன் என்பவருமே நடந்தி வந்திருந்தார்கள்.யாழ் மக்கள் தாம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்க சென்ற பொழுது, இங்கே எங்களிடம் பணம் இல்லை நீங்கள் இலங்கை மத்திய வங்கியிடம் சென்று முறையிடுங்கள் என்று வித்தியாதரன் என்பவரே மக்களை விரட்டி அனுப்பி இருந்தார்.இந்த வித்தியாதரனையே தமிழரசுக் கட்சியினர் வடக்கு மாகாணத்தின் முதல்வர் பதவியை வழங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவர்கள் மக்களின் பணத்தினை கொள்ளை அடித்து எத்னை வருடங்கள் ஆகியுள்ளன, உதயன் மற்றும் சுடரொளி என்று இரண்டு பத்திரிகைகளை நடத்தி லட்சக்கணக்காக உழைத்தவர்கள், விரும்பி இருந்தால் வட்டியை விடுத்து முதலை ஆவது அந்த மக்களுக்கு திருப்பி செலுத்தி இருக்கலாம். மைத்துனர்கள் சேர்ந்து வடக்கு மாகாணத்தை கொள்ளை அடிப்பதற்கு தமிழரசுக் கட்சியும் அதன் நாடாளமன்ற குழு தலைவர் சம்மந்தரும் உடந்தையாக இருப்பதுதான் மிகவும் வேதனையான நிகழ்வாகும். வித்தியாதரனும், சரவணபவனும் தமிழ் தேசியம் என்ற போர்வையில் புலிதேசியத்தினையே வலியுறுத்தி வந்தார்களே தவிர தமிழ் மக்களின் விடுதலைக்காக உண்மையாக உழைத்தவர்கள் அல்ல. பொங்கலுக்கு தமிழ் ஈழம், அகலகால் வைக்கும் படையினரை புலிகள் ஊடறுத்து தாக்குவார்கள் என்றெல்லாம் எழுதி மக்களை மாயையில் வைத்தார்களே தவிர , உண்மை நிலையினை எழுதியவர்கள் அல்ல. ஈழ தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தில் வித்தியாதரனின் பங்கு என்ன? சரவணபவனுக்கு நாடாளமன்ற உறுப்பினராக்கிய சம்மந்தர் தற்பொழுது, அவரின் மைத்துனர் வித்தியாதரனை வட மாகாணத்தின் முதல்வராக்குவதற்கு முயற்சிப்பதாக தமிழரசு கட்சி உள் வட்டாரங்களில் முணுமுணுப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன. புலிகளுக்கு புகழ்பாடிய சுடரொளி பத்திரிகையின் உரிமையார் சரவணபவன், தலமை ஆசிரியர் வித்தியாதரன் ஆகியோர் , புலிகள் முல்லி வாய்க்காலில் முற்று பெற்றபின்னர் தமிழரசு கட்சியினர் குறித்து புகழ்பாடி தமக்கான இலவச பிரட்சாரங்களை மேற்கொண்டதினால்! சம்மந்தர் சரவணபவனுக்கு நாடாளமன்ற வேட்பாளர் பட்டியலில் இடம் கொடுத்ததுடன் , வித்தியாதரனை முதல்வராக்குவதற்கு முயற்சிக்கின்றார்.
வட மாகாணசபை தேர்தலில் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று வித்தியாதரன் சம்மந்தரிடம் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் சம்மந்தருக்கு அடுத்த கட்ட தலைவராக இருக்கும் சுரேஸ் பிரேமசந்திரனுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் தெரியவந்துள்ளது. தமிழரசுக் கட்சிக்குள் மூத்த தலைவர்கள் பலர் இருக்கையில் வித்தியாதரக்கு எப்படி முதல்வர் பதவி வழங்க முடியும் என்று சுரேஷ் கேள்வி எழுப்பியதாக அறியப்படுகின்றது.இந்த விடயத்தில் சுரேஷ் நேர்மையாக இருப்பது வரவேற்க தக்கதாகும்.
தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் , இரோஸ், இ.பி.ஆர்.எல்,எவ்,ரெலோ,புளொட் ஆகிய அமைப்புக்களை சேர்ந்த பலர் , பல ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுக்காக அரும்பாடு பட்டிருக்கின்றனர். இவர்களில் ஒருவரையாவது முதல்வர் வேட்பாளராக நியப்பிப்பதினை தவிர்த்து, யாழ் மாவட்ட மக்களின் சொத்துக்களை பகல் கொள்ளையடித்த வித்தியாதரனை வட மாகாணத்தின் முதல்வராக்க முயற்சிப்பது எந்த விதத்தில் நியாயமாகும். புலி என்ற மாயைக்குள் வீழ்ந்து கிடத்த மக்கள் பேரழிவினை எதிர்கொண்ட பின்னர், தமிழரசு கட்சியின் வீரவசனங்குள் வீழ்ந்து கிடக்கின்றனர். புலிகள் தமிழ் ஈழம் பெற்று தருவார்கள், அவர்களை நீங்கள் நம்பலாம் என்று புலிகளின் பிரதிநிதிகளாக செயற்பட்ட தமிழரசு கட்சி நாடாளமன்ற உறுப்பினர்கள், தற்பொழுது தம்மை நம்புமாறு மக்களிடம் கேட்கின்றனர். வட கிழக்கு மக்களை பொறுத்த வரையில் அனுபவித்து, பேரழிவினை எதிர்கொண்டு, பரிதவித்த பின்னரே அவர்ளுக்கு அறிவு வரும், அதுவரையில் எந்த அறிவு ஜீவி கூறினாலும் கேட்டுக் கொள்ள மாட்டார்கள். தமிழரசு கட்சி நாடாளமன்ற உறுப்பினர்களின் வேசங்களை அவர்கள் அறிந்து கொள்ளும் நாள் தூரத்தில் இல்லை. அப்பொழுது அவர்கள் தற்பொழுது இருக்கும் நிலையினை காட்டிலும் மிகவும் மோசமான நிலைக்கு தளப்பட்டு இருப்பார்கள். ஆனால் அப்பொழுதும் எம்மை போன்றவர்கள் அந்த மக்களுக்காக குரல் கொடுப்போம்.
முதலீட்டு நிறுவனத்தின் முதலாளிகளாக இருக்கும் போது மக்கள் முதலீடு செய்த பணத்தை கொள்ளையடித்த மைத்துணர்கள்(சரவணபவன், வித்தியாதரன்) வடக்கின் முதல்வராக வந்தால் அந்த பகுதி மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி உதவிகள் எங்கு போய் செரும்?
ஆனாலும் தமிழரசு கட்சியின் நாடாளமன்ற உறுப்பினர்களின் தலைவர் சம்மந்தர் வட மாகாண சபையின் முதல்வருக்கான வேட்பாளராக வித்தியாதரனை நியமித்து, அவரை வட மாகாண மக்கள் தமது முதல்வர்வராக தெரிவு செய்தாலும், அது ஒன்றும் ஆச்சரியத்திற்கு உரிய நிகழ்வாக இருக்க போவதில்லை.

கருத்துகள் இல்லை: