செவ்வாய், 22 ஜூன், 2010

300 மீள்க்குடியேற்றப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளை பொலீஸ் பணிக்கு இணைத்துக் கொள்வது

வடக்கில் மீள்க்குடியேற்றப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 300 இளைஞர் யுவதிகளை பொலீஸ் பணிக்கு இணைத்துக் கொள்வது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். கிளிநொச்சி, முல்லைதீவு, மன்னார் மாவட்டங்களில் மீள்க்குடியேற்றப்பட்ட குடும்பங்களில் உள்ள தகுதியான இளைஞர், யுவதிகள் இதற்காக தெரிவு செய்யப்படவுள்ளனர். அடுத்த வருடம் இவர்கள் காவற்துறை பணிகளில் இணைத்து கொள்ளப்படவுள்ளதுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் பொலீஸ் பயிற்சி கல்லூரியொன்றை நிறுவவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 265 இளைஞர்களும் 16 யுவதிகளும் காவற்துறைப் பணியில் இணைத்து கொள்ளப்பட்டதுடன் அவர்கள் பயிற்சிகளுக்காக களுத்துறை பொலீஸ் பயிற்சி கல்லூரியில் சேர்க்கப்பட்டு தற்போது பயிற்சிகனை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: