மின்னம்பலம் : திமுக
தலைவர் கருணாநிதியின் 94ஆவது பிறந்த நாள் மற்றும் அவரின் சட்டப்பேரவை வைர
விழாவில் ராகுல் காந்தி, நிதிஷ் குமார், சீதாராம் யெச்சூரி, பரூக்
அப்துல்லா, நாராயணசாமி, சுதாகர் ரெட்டி உள்ளிட்ட முக்கிய தேசியத் தலைவர்கள்
கலந்து கொண்டனர்.
திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி, சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எனவே, அவரின் வைர விழாவும், 94ஆவது பிறந்த நாள் விழாவும் ஜூன் 3ஆம் தேதி மாலை கொண்டாடப்பட்டது. விழாவுக்குத் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் வரவேற்புரையாற்றினார். இந்த விழாவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. மஜித் மேமன், திரிணாமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத்தலைவர் டெரிக் ஓ பிரையன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, கனிமொழி எம்.பி., திருச்சி சிவா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் பங்கேற்றனர்.
கருணாநிதி சட்டப்பேரவை வைர விழாவுக்காக ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், சட்டப்பேரவை மாதிரி வடிவில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டது. மேடைக்கு எதிரே ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அமர, பந்தலுடன் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கான பணிகள் கடந்த இரண்டு வாரங்களாகவே நடந்துவந்தன. குடியரசு தலைவருக்கான தேர்தல் வரவிருக்கும் நிலையில், பாஜக-வுக்கு எதிரான ஒரு வேட்பாளரை நிறுத்துவதற்கான ஒரு முக்கிய நிகழ்ச்சியாகவே இந்த விழா கருதப்படுகிறது.
விழா மாலை ஐந்து மணிக்குத் தொடங்கியது. திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் வரவேற்புரையாற்றினார். பின்னார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா பேசினார். அவர் பேசுகையில், “மதவெறி அரசியலுக்கு எதிராக ஸ்டாலினும் எங்களுடன் கைக்கோப்பார் என நம்புகிறேன். அண்ணா பதவியேற்றபின் மெட்ராஸ் என்பது தமிழ்நாடு என்றானது. தமிழ்நாடு என்று சொல்லும்போதெல்லாம், அண்ணா நம் நினைவுக்கு வருகிறார். 1996 மற்றும் 1997 வருடங்களிலே மெட்ராஸ் என்ற நகரத்தின் பெயரை சென்னை என்று மாற்ற, கடிதங்கள் எழுதி விடாப்பிடியாக இருந்து பெயரை மாற்றிக்காட்டினார் கலைஞர். கலைஞர் அடிப்படையிலே ஒரு சமூகப்போராளி. சமூகம் மீதான அடக்குமுறைகள் ஒழிய வேண்டும் என போராடியவர். ‘பெரியாரை சந்திக்கவில்லை என்றால் நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருப்பேன்’ என ஒருமுறை கலைஞர் சொல்லியிருக்கிறார். ஆனால், பெரியாரை சந்தித்ததனால்தான் கலைஞர் திராவிடத்தின் சூரியனாக உருவாகியிருக்கிறார். பெரியாருக்கும் மார்க்ஸுக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவுமில்லை. பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் மார்க்ஸின் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டுள்ளனர். வரலாற்றில் அற்புதமான பண்புகளைக் கொண்டவர் கலைஞர். அவர் பன்முக தன்மைகொண்ட ஒரு தலைவர். இந்தியாவைத் தற்போது மதவாத சக்திகள் அச்சுறுத்தி அரசியல் செய்து வருகின்றன. இந்தியாவின் கூட்டாட்சியைக் காப்பாற்ற கலைஞர்தான் முதல் குரல் கொடுத்தார். இந்தியாவில் தற்போது பாசிச கொள்கைகள்கொண்ட ஆட்சி நடந்துவருகிறது. கலைஞரின் முதல் குரல் மதவெறிக்கு எதிரான குரலாகவே இருந்திருக்கிறது. ‘பாலம் கட்ட ராமன் என்ன தொழில்நுட்ப கலைஞனா?’ என்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய ஒரே தலைவர் கலைஞர்” என அவர் பேசினார்.
பின்னர் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசினார். அவர் பேசுகையில், “கலைஞரின் 94ஆம் பிறந்த நாள் விழாவுக்காக கனிமொழி அவர்கள் எனக்கு அழைப்பு விடுத்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடியவர் கலைஞர். எனவே, அவரின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என நான் இங்கு வந்திருக்கிறேன். கலைஞர் தன் 14 வயதிலேயே சமூகப்பணியில் ஈடுபட்டவர். முதலில் தமிழில் எழுத்து மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். தன் எழுத்துகளின் மூலம் மக்கள் மனதில் சிந்தனையைத் தூண்டச் செய்தவர். அரசியலில் கலைஞர் எழுதிய சரித்திரத்தை வேறு யாரும் மறுமுறை எழுத முடியாது. ஐந்து முறை முதல்வர் பதவி, போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி போன்ற சாதனைகள் யாராலும் தொட முடியாத உயரங்கள். 48 ஆண்டுகளாக திமுக-வின் தலைவராக இருந்திருக்கிறார். இந்தியாவின் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் கலைஞர் முன்னோடியாக இருந்திருக்கிறார். வி.பி.சிங் பிரதமராக இருக்கையில், மண்டல் கமிஷன் என்ற சரித்திரத் திட்டத்தை கலைஞர் முன்மொழிந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் வெளிச்சம் வர வேண்டும் என்று வி.பி.சிங் அதை ஏற்றுக்கொண்டார். அதை தடுக்கவும் சில தீய சக்திகள் முயன்றன. சமூகத்துக்காக கலைஞர் நிறைய போராடியிருக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு 30% இடஒதுக்கீட்டை வழங்க கலைஞர் அரும்பாடுபட்டார். தமிழகத்தில் திமுக மிக சக்திவாய்ந்த இயக்கமாக உள்ளது. பீகாரில் எப்படி பூரண மதுவிலக்கு கொண்டுவரப்பட்டதோ, அதேபோல் தமிழகத்திலும் கொண்டுவரப்படும் என திமுக-வின் தேர்தல் அறிக்கையில் இருந்தது. அதை நான் படித்தேன். பீகாரில் மதுவிலக்கு கொண்டுவந்ததால் பல முன்னேற்றங்கள் வந்துள்ளன. மக்கள் மதுவுக்காகப் பணம் செலவழிப்பதில்லை. சாலை விபத்துகள் குறைந்துவிட்டன. குற்றங்கள் குறைந்துவிட்டன. ஓர் அரசுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? தமிழகத்திலும் அதேபோல் நடக்க வேண்டும். திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விரைவில் முதல்வர் ஆவார் என எனக்கு தோன்றுகிறது. அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆட்சிக்கு வந்தபின் நல்லாட்சியை, மக்கள் விரும்பும் ஆட்சியை தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. லாலு பிரசாத்தின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை. ஆனால், எங்களின் எண்ணங்கள் ஒன்றாக இருக்கிறது. கலைஞரின் எண்ணங்களைத்தான் லாலு பிரசாத்தும் கொண்டுள்ளார்” என அவர் பேசினார்.
இதன்பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார். அவர் பேசுகையில், “மாநிலத்தில் சுயாட்சியைக் காப்பாற்ற கலைஞர் அவர்கள் போராடினார். தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியை பிடித்து முதலமைச்சர் ஆவார் என்று நிதிஷ் குமார் பேசினார். அவ்வாறே திராவிட ஆட்சி தமிழகத்தில் வர வேண்டும் என்று நினைக்கிறேன். மத்தியில் இருக்கும் கட்டுக்கடங்காத சர்வாதிகார ஆட்சியை எதிர்க்க தமிழகத்தில் நல்லாட்சி மலர வேண்டும். மத்தியில் பாஜக அரசு வரம்புகளை மீறி செயல்பட்டு வருகிறது. மாநிலச் சுயாட்சி கமிஷன் அமைக்கக் காரணமாக இருந்தவர் கலைஞர். மாட்டிறைச்சி விவகாரம், நீட் தேர்வு மற்றும் கல்வி விவகாரங்களில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது. மாநில அரசுகளின் அதிகாரங்களைக் காப்பாற்ற சட்டம் இயற்றப்பட வேண்டும். கலைஞரின் இலக்கிய மற்றும் அரசியல் சேவைகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும். அதற்குமுன் அவருக்குப் பாரத ரத்னா விருதும் வழங்கப்பட வேண்டும். இந்தியாவுக்குத் திராவிட கொள்கைகள் தற்போது பெரிதும் தேவைப்படுகிறது. திராவிட கொள்கை, சாதி மதம் என்ற பிரிவுகளை வேரறுக்கக்கூடிய கொள்கை. பெரியார், அண்ணா, கலைஞரின் பாதையில் செல்லும் ஸ்டாலினும் அக்கொள்கைகளின்படியே நடக்க வேண்டும். இது கலைஞரை வாழ்த்த வந்த நிகழ்ச்சி மட்டுமல்ல. தமிழக அரசியலில் மாற்றம் கொண்டுவரக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி” என அவர் பேசினார்.
இதற்குபின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. மஜித் மேமன் பேசினார். அவர் பேசுகையில், “இந்தியாவின் மொத்த அரசியலுக்குமான தலைவர் கலைஞர். மகாராஷ்டிராவில் தவறான கல்விக் கொள்கைகளுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதை மாற்ற வேண்டுமானால் இந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என என் தலைமையிடம் இருந்து எனக்கு வேண்டுகோள் வந்தது. கலைஞர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன். மேலும் அவர் இநக்ச் சமுதாயத்தில் சமத்துவம் மேம்பட தொடர்ந்து போராட வேண்டும். நாட்டில் தற்போது மதவாதம் மற்றும் பாசிச கொள்கைகள்கொண்ட சக்திகள் தலைதூக்கியுள்ளன. அவற்றை ஒடுக்க கலைஞர் மீண்டும் வர வேண்டும். இந்தத் தீய சக்திகளை எதிர்க்கத்தான் இத்தனை தலைவர்கள் இங்கு ஒன்றாக கூடியிருக்கிரோம். ஆனால், இத்தகைய தீய சக்திகளை எதிர்க்க கலைஞர் என்ற ஒரு சக்தி போதுமானது. மேடையில் இருக்கும் தலைவர்களால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மொத்த சக்திகளும் இங்கு இருக்கின்றன. உங்களிடம் தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன்” என அவர் பேசினார்.
பின்னர் திரிணாமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத்தலைவர் டெரிக் ஓ பிரையன் பேசினார். அவர் பேசுகையில், “கலைஞர் முன்மொழிந்ததிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டமே ஆகும். மேற்கு வங்கத்தில் 34% மக்களவை எம்.பி-க்கள் பெண்களாக இருக்கின்றனர். பெண்கள் முன்னேற்றத்துக்காக திமுக-வும் போராடி வருகிறது. மாட்டிறைச்சிக்கான தடை ஜனநாயகத்துக்கு எதிரான, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான ஒரு நடவடிக்கை. 1957ஆம் வருடத்திலேயே கலைஞர் சட்டமன்ற உறுப்பினராக ஆகியிருக்கிறார். நம்மில் பலர் அப்போது பிறந்திருக்கவே மாட்டோம். திருநங்கைகளுக்கான உரிமைகள் அவர் முன்மொழிந்தவற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. மம்தா பானர்ஜியின் கொள்கைகள் கலைஞரின் கொள்கைகளைப் பிரதிபலிக்கிறது. பிராந்திய மொழிகளை நாம் பாதுகாக்க வேண்டும். தமிழாக இருந்தாலும், வங்க மொழியாக இருந்தாலும் அதைப் பாதுகாப்பது நம் கடமை. கலைஞருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்டாலின் அவரின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துகிறேன். பிராந்திய கட்சிகள் அனைத்தும் டெல்லியில் முக்கியத்துவம் வகிக்க வேண்டும். மம்தா பானர்ஜியும் அதையே விரும்புகிறார்” என அவர் பேசினார்.
இதற்குபின் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேசினார். அவர் பேசுகையில், “காஷ்மீரமும் கன்னியாகுமரியும் தற்போது இணைந்திருக்கிறது. 14 முறை தேர்தலில் வெற்றிபெற்ற தலைவர் உலகத்திலேயே இல்லை. இந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்தில் எழுதப்பட வேண்டும். மேலும் கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும். மத்திய அரசில் மதவாத சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதற்கு எதிராகவே இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சொல்லமுடியாத அளவிலான ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது. மத்திய அரசின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இங்கு ஆட்சி நடக்கிறது. தமிழக ஆட்சியாளர்கள், மத்திய அரசு உட்கார சொன்னால் உட்காருகிறார்கள், ஆடச்சொன்னால் ஆடுகிறார்கள். டெல்லியில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. அவரவரின் விருப்பமான உணவை சாப்பிடுவதில் அரசு தலையிடக் கூடாது. அது ஒவ்வொருவரின் தனிமனித உரிமை. இப்படி கோமாளித்தனமான ஆட்சி மத்தியில் நடக்கிறது. இதை எதிர்க்க கலைஞர் அவர்களின் வழியில் நடக்க வேண்டும்” என அவர் பேசினார்.
இதற்குபின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி பேசுகையில், “60 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறுவது சாதாரணமான விஷயம் அல்ல. சட்டமன்ற உறுப்பினராகவும், முதல்வராகவும் தமிழகத்தின் தலையெழுத்தைக் கலைஞர் எழுதியிருக்கிறார். இந்தியாவின் மூத்த தலைவராக இந்தியாவின் தலையெழுத்தையும் கலைஞர் எழுதியிருக்கிறார். இந்த வயதிலும்கூட, திமுகவை மட்டுமல்லாமல், தமிழகத்துக்கும் கலைஞர் வழிகாட்டுகிறார். கடந்த மூன்று வருடங்களில் நிறைய ஆபத்துகள் நிகழ்ந்துவிட்டன. எப்போதும் அரசுகள் மாறுவது இயல்புதான். ஆனால், தற்போது பாசிச இயக்கங்கள் அரசை இயக்குகிறது. சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்களையும், தலித் மக்களையும் ஆட்சியாளர்கள் தாக்குகின்றனர். அரசுகள் மாறிக்கொண்டே இருக்கும், ஆனால் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசுகள் தீர்மானிக்க கூடாது. மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடுத்த வேண்டும், என்ன படிக்க வேண்டும் என்பதை அரசுகள் முடிவு செய்ய முடியாது. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, மும்பை முதல் மேற்கு வங்கம் வரையிலான தலைவர்களை வரவழைத்து இந்த நிகழ்ச்சியைக் கருணாநிதி உருவாக்கியிருக்கிறார். தீய சக்திகளை எதிர்த்து நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என அவர் பேசினார்.
பின்னர் ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசுகையில், “60 வருடங்களாக யாராலும் செய்ய முடியாத சாதனைகளைக் கலைஞர் செய்திருக்கிறார். கலைஞர் இனிமேல்தான் நீண்ட நாள் வாழ வேண்டும். ஏனெனில் நாம் இப்போதுதான் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கி இருக்கிறோம். காங்கிரஸ் இல்லாத ஆட்சியை அமைக்க பாஜக நினைக்கிறது. மக்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் ஆகியோருக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மதவாதக் கொள்கைகள் கொண்ட பாஜக-வுக்கு எதிராக இங்கு உள்ள அனைத்து தலைவர்களும் போராடுவோம்” என அவர் பேசினார்.
பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசுகையில், “ஒருமுறை நான் சென்னை வந்திருந்தபோது கலைஞரைச் சந்திக்க முடியவில்லை. அப்போது அவர் நீலகிரியில் ஏதோ ஓர் இலக்கியப் பணிக்காக சென்றிருந்தார். நீலகிரியில் கலைஞர் இலக்கிய பணியில் இருக்கிறார் என்றால் தமிழகத்தில் அனைத்தும் நன்றாக செயல்படுகிறது என்பதை நான் புரிந்துகொண்டேன். தற்போது நிலவும் ஆட்சியில் ஊழலே இல்லை என்று கூறுகிறார்கள். மத்திய அரசின்கீழ் இயங்கும் பொதுத்துறை ஆலைகளுக்கு, மோடியின் மூன்றாண்டு அரசின் சாதனை விழாவுக்காக பல கோடி ரூபாய்கள் செலவு செய்யும்படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கட்சியின் விழாவுக்காக அரசின் பணத்தைச் செலவு செய்வது ஊழல் இல்லையா? இந்தியாவின் தேசபக்தர்கள் ஒன்றாக கூடினால்தான் தீய சக்திகள் கலைந்து போகும். தற்போதைய பாசிச ஆட்சியில் என்ன உணவை நாம் சாப்பிட வேண்டும் என்பதைகூட அவர்கள் முடிவெடுக்கிறார்கள். கலைஞரின் வழிகாட்டுதல்கள் நிச்சயமாக நமக்கு இந்த ஆபத்தான நிலையில் தேவை. இந்த தீய சக்திகளைக் கலைஞரின் அறிவாற்றலைக்கொண்டு முறியடிப்போம். என்னுடைய மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கிறேன், எனவே, நான் உங்களைவிட பெரிய கம்யூனிஸ்ட் என கலைஞர் என்னிடம் கூறியிருக்கிறார். கலைஞரின் அறிவுரைகள் எங்களுக்கு இன்னும் பல வருடங்களுக்கு வழிகாட்டும். இந்தியாவைத் தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றவில்லையெனில் நாங்கள் ஒன்றாக கூடியிருப்பது அர்த்தமற்று போகும்” என அவர் கூறினார்.
பின்னர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “கலைஞரைக் கோடானுகோடி மக்கள் நேசிக்கிறார்கள். கலைஞரும் தமிழ் மக்கள்மீது அதிகப்படியான அன்பை வைத்திருக்கிறார். கலைஞரின் வரலாற்றுச் சாதனையை யாராலும் சாதிக்க முடியாது. தமிழனின் கலாசாரம் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை யாரும் கற்றுத்தர தேவையில்லை. ஆனால், இந்தியர்கள் அனைவரும் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அனைத்து பதில்களையும் சிலர் வைத்திருக்கின்றனர். அவர்கள் விவாதங்களிலும், ஆலோசனைகளிலும் ஈடுபடுவதே இல்லை. அவற்றில் அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை. யாருடனும் ஆலோசிக்காமல், திடீரென ஒருநாள் மக்களின் பையில் இருக்கும் பணம் செல்லாது என மோடி அறிவிக்கிறார். இந்தியாவின் ஜிடிபி சரிந்ததற்கும், பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கும் சம்பந்தமே இல்லை என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகிறார். பணமதிப்பிழப்பு இந்தியப் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படுவது அருண் ஜெட்லிக்குக்கூட தெரிந்திருக்காது. அவரிடம்கூட ஆலோசிக்காமல்தான் மோடி பணமதிப்பிழப்பை அறிவித்திருக்கிறார். ஆட்சியாளர்களின் எண்ணங்களின்படி இந்தியர்கள் நடக்க வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர். இந்தியர்கள் அனைவருக்கும் அவர்களின் கருத்தைச் சொல்லவும், போராடவும் உரிமை இருக்கிறது. நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளை இந்தியா முழுவதும் திணிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. மேடையில் இருக்கிற ஒவ்வொரு தலைவர்களும் மக்களுக்காகப் போராடக்கூடியவர்கள். இந்த விழாவை ஏற்பாடு செய்ததற்கும், எங்களை இங்கு வரவழைத்ததற்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்டாலினுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய பொறுப்புகள் இருக்கின்றன. அவர் சரியான பாதையில் பயணிக்கிறார். கலைஞரைத் தற்போது நாம் வாழ்த்துவதுபோல், எதிர்காலத்தில் ஸ்டாலினையும் வாழ்த்துவோம்” என அவர் பேசினார்.
பின்னர் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் பேசுகையில், “தந்தை பெரியார் கலைஞரைப் பற்றி பேசுகையில், ‘கலைஞர் ஆட்சியில் 13 அமைச்சர்களில் 13 பேரும் தமிழர்கள். அதேபோல் நீதிபதிகள் 18 பேரில் 16 பேர் தமிழர்கள். எனவே, கலைஞரின் ஆட்சி தமிழர்களுக்கான ஆட்சி’ என்று பாராட்டியிருக்கிறார். ‘என்னைப் பற்றி முழுமையாக அறிந்தவர்களில் முற்றிலுமாக அறிந்தவர் கலைஞர்’ என அண்ணா பாராட்டியிருக்கிறார். தொட்ட துறைகளில் எல்லாம் கலைஞர் எல்லையைத் தொட்டவர். 100 ஆண்டுகால திராவிட ஆட்சியில் அரை நூற்றாண்டைக் கடந்தவர் கலைஞர். கலைஞரைப் போல தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும் எந்தத் தலைவரும் இல்லை” என அவர் பேசினார்.
பின்னர் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “13 முறை தோல்வியையே சந்திக்காமல் கலைஞர் வெற்றி பெற்றுள்ளார். 48 ஆண்டுகாலமாக திமுக தலைவராகக் கலைஞர் பணியாற்றி இருக்கிறார். திராவிட நூற்றாண்டில், அரை நூற்றாண்டு பணியைக் கலைஞர் ஆற்றியுள்ளார். சில அநாதை தலைவர்கள் கேலியும், கிண்டலும் செய்தார்கள். 25 வருடங்களுக்குமுன் கலைஞர் தேசிய முன்னணி மாநாட்டைக் கூட்டி தேசிய தலைவர்களை ஒன்றுதிரட்டினார். கலைஞரை வெளியில் அழைத்துச்சென்றால் தொற்றுகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்ததால், அவரை இங்கு அழைத்து வர முடியவில்லை. மாநில உரிமைகளுக்காக போராடியவர் கலைஞர். மதச்சார்பற்ற கழகமாக திமுக திகழ்ந்து வருகிறது. பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்காகப் போராடும் கழகம் திமுக. ஜனாதிபதியை உருவாக்கும் ஆற்றல்கொண்டவர் தலைவர் கலைஞர். மத்திய அரசு தற்போது மக்களை வஞ்சித்து வருகிறது. பாஜக கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை. விவசாயிகளை மதிக்காத அரசு, பாஜக-வின் அரசு. அனைத்து மாநிலங்களிலும் மதத்தலைவர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என பாஜக நினைக்கிறது. இந்தியாவில் பாஜக-வுக்கு முற்றுப்புள்ளி வைத்து செயல்படுவதே நமது முக்கியமான குறிக்கோள். தற்போது கலைஞர் இருந்திருந்தால் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பார். இந்தியாவைக் காவி நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது. அதை எதிர்க்கத்தான் நாங்கள் அனைவரும் இங்கு கூடியிருக்கிறோம். இந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பைதான் நாங்கள் எதிர்க்கிறோம். இந்தியாவில் மதசார்பின்மை மற்றும் மதவாதச் சக்திகளை எதிர்க்க வேண்டும். இன்னொரு சுதந்திரப் போராட்டத்தை இந்தியாவில் உருவாக்கிவிடாதீர்கள் என்பதை நான் ஆட்சியாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். மக்களும் அத்தகைய ஒரு போராட்டத்துக்கு தயாராக இருக்கின்றனர்” என அவர் பேசினார்.
பின்னர் திமுக எம்.பி. திருச்சி சிவா, நிகழ்ச்சிக்கான முடிவுரையை வழங்கினார். சுமார் 9 மணியளவில் நிகழ்ச்சி நிறைவுற்றது. மத்தியில் நடக்கும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக இருக்கும் தலைவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதால், குடியரசு தலைவர் தேர்தலிலும், எதிர்காலத்தில் வரவிருக்கும் அரசியல் தேர்தல்களிலும் இந்த நிகழ்ச்சியால் மாற்றம் ஏற்படலாம் என நம்பப்படுகிறது. இந்திய அரசியலில் இந்த நிகழ்ச்சி ஒரு திருப்புமுனையாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- அ.விக்னேஷ் & வெ.மனோஜ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக