ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

யாழில் மர்ம மனிதனை பிடிக்க இராணுவம், பொலிஸ் கூட்டு ரோந்து குழுக்களாக கூடி நிற்கவேண்டாமென மக்களுக்கு அறிவுரை!


யாழ். குடாநாட்டு மக்களை மர்ம மனிதனிடம் இருந்து பாதுகாப்பதற்காகவும் கிaஸ் மனிதனைப் பிடிப்பதற்காக இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து வெள்ளிக்கிழமை இரவு முதல் காலை வரை கூட்டு ரோந்தில் ஈடுபடு வதற்கு முடிவு செய்துள்ளதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க அறிவித்துள்ளார்.

இரவு ரோந்து நடவடிக்கைக்குப் பொலிஸார் நேற்றிலிருந்து ஆரம்பித்துள் ளதாகவும் இராணுவத்தினர் அவர்கள் கடமையாற்றுகின்ற காவலரணில் நின்று கொண்டும் துவிச்சக்கர வண்டியிலும், மோட்டார் சைக்கிள்களிலும் மற்றும் நடைபாதையாகவும் ரோந்தில் ஈடுபடவுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் தங்களது அன்றாடக் கடமைகளுக்கு பாதுகாப்பாக இராணுவத்தினர் இருப்பார்கள் எனவும் குழுக்களாக எங்கும் கூடி நிற்க வேண்டாம் எனவும் மர்ம மனிதன் நடமாடினால் அருகில் உள்ள காவலரணுக்கு சென்று தகவல் கொடுக்கும் படியும் இராணுவத்தினர் உங்களுக்கு உதவி புரியக் காத்திருப்பதாகவும் ஹத்துரு சிங்கவின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: