ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளின் கொள்கைகளையே பின்பற்றுகின்றனர் – டக்ளஸ் தேவானந்தா!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி புலிகளின் கொள்கைகளையே தொடர்ந்தும் பின்பற்றி வருவதாக ஈ.பி.டி.பி.யின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் பொதுவான ஓர் இணக்கப்பாட்டை எட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது பொதுவான இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மெய்யான நாட்டம் காட்டவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் புலிகளின் கோட்பாடுகளையே முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினைக்கு தீர்வு காண புலிகள் விரும்பவில்லை எனவும், இதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் எவ்வித பயனும் கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் மூலம் எட்டப்படும் தீர்வுத் திட்டத்தை தெற்கு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகல இன சமூகங்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: