நவீன வாழ்க்கையை தவறாக புரிந்து கொண்ட நாம் ,வெளிநாட்டினரிடமிருந்து தவறான விசயங்களையே எடுத்துக்கொண்டிருக்கிறோம். தேக ஆரோக்கியத்தை பொறுத்தவறை,நாம் பலவீனர்களாக இருப்பதற்கு இதுதான் காரணம்.நம் முன்னோரை போல் நாம் நடப்பதில்லை.சைக்கிளில் செல்வதில்லை.இரண்டு பர்லாங்க் தூரத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்குகூட,நடந்தோ,சைக்கிளிலோசெல்வதில்லை.அதற்கும் ஸ்கூட்டர் வேண்டியதிருக்கிறது.
இப்படி குழந்தையிலிருந்தே உடல் உழைப்பைத் தவிர்த்த சொகுசு வாக்கைக்கு பழப்படுத்தடுகிறோம்.தரையில் அமர்ந்து சாப்பிட்டால் தொப்பை குறையும்.சம்மணமிட்டு அமர்வதுதான் பத்மாசனம்.ஆனால் இன்றைய நம் தலைமுறைக்கு சம்மணமிட்டு அமர்வது என்றால் என்னவென்றே தெரியாது.
முஸ்லீம்கள் ஆட்டிறைச்சி உண்கிறார்கள்.ஆனால் அவ்வளவாக இதய நோய்க்கு ஆட்படுவதில்லை..காரணம் தொழுகை.தொழுகையின்போது அமரும் நிலையை யோகாவில் வஜ்ராசனம் என்பார்கள்.வஜ்ராசனம் செய்தால் கல்லும் செரிமானம் ஆகும்;குடல் வஜ்ரத்தை போல் ஆகும் என்பதால் அந்த பெயர் .அதோடு கூட அவர்கள் உணவில்சேர்த்துக்கொள்ளும் லவங்கப்பட்டையும்,பூண்டும் கொழுப்பை கரைக்க வல்லது.
நம் செல்வங்களையெல்லாம் வெள்ளைக்காரர்களிடம் தாரை வார்த்துக்கொடுத்துவிட்டு ,அதையே அவர்கள் டாலரில் விற்கும்போது வாயெல்லாம் பல்லாக இளித்துக்கொண்டு வாங்கி பயன்படுத்துகிறோம்.அது போன்ற ஒரு கலிகால கொடுமையைப் பார்ப்போம்.
விநாயகரின் முன்னே நின்று தோப்புக்கரணம் (சரியான உச்சரிப்பு;தோப்பிகரணம் )போடுபவர்களை பார்த்து ,பகுத்தறிவு களஞ்சியமாக கிண்டல் அடித்தோம் அல்லவா..?
அது இப்போது அமெரிக்காவில் super brain yoga என்ற பெயரில் பெரிய ஆரவாரத்தை கிளப்பிக்கொண்டிருக்கிறது.பல நூறு டாலர் கொடுத்துக்கற்றுக்கொள்கிறார்கள்.இன்னும் சிறிது நாளில் நாமும் 5000 கொடுத்து இங்கே கற்றுக்கொள்ளப்போகிறோம்.டாலர் கொடுத்து தோப்பிக்கரணம் கற்றுக்கொள்ளும் காமெடியை,நீங்கள் யுடூப்பில் காணலாம்.
1 கருத்து:
உண்மைதான் எதுவும் வெள்ளைக்காரன் வாயால் வந்தால்தான் அதற்கு வலிமையுண்டு. எமக்கு எம்மிலேயே நம்பிக்கையில்லை. மிகப்பரிதாபமான நிலைமைதான். அதுதான் நாம் அழகான இந்த நாட்டை விட்டு வெளிநாடுகளில் தஞ்சம் கேட்கவேண்டிய நிலைமைக்கு வந்திருக்கிறோம். இனிமேலாவது எம்மில் இருக்கும் நல்ல விஷயங்களை கொண்டாட முனைவோமாக.
கருத்துரையிடுக