.nakkheeran.in - அதிதேஜா ; கேரள மாநிலம், திருவிதாங்கூர் மன்னர்
குடும்பத்திற்குச் சொந்தமான நிலங்களை சட்ட விரோதமாக, இரு வெவ்வேறு
தரப்பினருக்கு விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, திருவிதாங்கூர்
மன்னர் குடும்ப வாரிசுகளான ஹெச்.ஹெச்.உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட
வர்மா, ஹெச்.ஹெச்.பூயம் திருநாள் கெளரி பார்வதி பாய், ஹெச்.ஹெச்.அஸ்வதி
திருநாள் கெளரி லட்சுமி பாய், ஹெச்.ஹெச்.அஸ்வதி திருநாள் ராமவர்மா,
ஹெச்.ஹெச். மூலம் திருநாள் ராமவர்மா ஹெச்.ஹெச். அவிட்டம் திருநாள் ஆதித்ய
வர்மா, ஏ.சி.ஆர். ராஜ் கணேசன், பி.ஆர். ராம்பிரபு ராஜ் ஆகியோர் மீது மத்திய
குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து
(வழக்கு எண் 5075/2020), நீதிமன்றத்தில் வழக்கின் இறுதி
அறிக்கையினை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
அந்த குற்றப் பத்திரிகையின்
அடிப்படையில், எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றம் மேற்சொன்ன
நபர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணையை அனுப்பி, நேரில் ஆஜராக
உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணை
வருகிற திங்கட்கிழமை, 11-01-2021 அன்று நடைபெறுகிறது. அன்றைய தினம்
அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக