புதன், 6 ஜனவரி, 2021

விஜய் - சிம்பு - தமிழக அரசு பேராசைக்கு நாங்கள் இரையாகனுமா? ... மருத்துவ பணியாளர்கள் கடும் கண்டனம்

Veerakumar - tamil.oneindia.com : சென்னை: உங்கள் பேராசைக்கு நாங்கள் இரையாக்க விரும்பவில்லை என்று, தியேட்டர்களில் 100 சதவீதம் ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில், மருத்துவர் ஒருவர் எழுதிய செய்த பேஸ்புக் போஸ்ட் தற்போது வைரலாக சுற்றி வருகிறது.
பொங்கல் பண்டிகையொட்டி, மாஸ்டர், ஈஸ்வரன் ஆகிய விஜய் மற்றும் சிம்பு நடித்த படங்கள் வெளியாகின்றன. எனவே 100 சதவீதம் ரசிகர்களுடன், தியேட்டர்கள் படம் பார்க்க அனுமதிக்க எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார் விஜய். சிம்புவும் அறிக்கை மூலம் இக்கோரிக்கையை முன்வைத்தார். முதல்வரும் இதற்கு சம்மதம் தெரிவித்து அனுமதி வழங்கிவிட்டார். இதை சுகாதாரத்துறை வல்லுநர்கள் கடுமையாக கண்டித்தபடி இருக்கிறார்கள். மூடிய அறைக்குள் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் அடைக்கப்படும்போது, கொரோனா வேகமாக பரவும் என எச்சரிக்கிறார்கள்.
 
சோர்ந்து போயுள்ளோம் இந்த நிலையில், அரவிந்த் சீனிவாசன் என்ற இளம் மருத்துவர் எழுதியுள்ள ஒரு பேஸ்புக் பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், அவர் கூறியிருப்பதை பாருங்கள்: டியர் விஜய் சார்.. சிலம்பரசன் சார் மற்றும் மாண்புமிகு தமிழக அரசே.. நான் சோர்வடைந்து போய்விட்டேன். நாங்கள் அனைவரும் சோர்வில் உள்ளோம். காவல்துறையினரும் சோர்வடைந்து போய்விட்டனர். துப்புறவு பணியாளர்களும் சோர்வில் உள்ளனர்.

நாங்கள் மூச்சு விட தகுதியானவர்கள் இதுவரை பார்த்திராத ஒரு பெரிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடிய இந்த காலகட்டத்தில், அதிக அளவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முயற்சிகளை செய்துள்ளோம். எங்களது பணியை நான் புகழவில்லை. எங்களுக்கு முன்பாக கேமராக்கள் இல்லை. சண்டை காட்சிகள் இல்லை. நாங்கள் ஹீரோக்கள் இல்லை. ஆனால் கொஞ்சம் மூச்சுக் காற்றை இழுத்து விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு தகுதியானவர்கள்தான் நாங்கள்.

பேராசை, சுயநலம் சிலரது சுயநலம் மற்றும் பேராசைக்கு நாங்கள் இரையாக விரும்பவில்லை. பெருந்தொற்று நோய் இன்னும் ஓயவில்லை. மக்கள் இன்னும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் 100% ரசிகர்களை தியேட்டர்களுக்கு அனுமதிப்பது ஒரு தற்கொலை முயற்சி. கொள்கை வகுப்பாளர்களோ, அல்லது நீங்கள் ஹீரோக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களோ, கூட்டத்தோடு கூட்டமாக சென்று திரைப்படம் பார்க்கப் போவது கிடையாது.

பண்டமாற்று முறை பண்டமாற்று முறை உயிரை பணயம் வைத்து பண்டமாற்று முறையில் இங்கு வணிகம் செய்யப்படுகிறது. அறிவியல் பூர்வமாக இது மிகவும் ஆபத்தான முடிவு என்பதை விளக்க நினைத்தேன். ஆனால் எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.. அதை நான் சொல்லிதான் என்ன பலன்? 'இப்படிக்கு சோர்வடைந்து போயுள்ள ஒரு ஏழை மருத்துவர்'. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை: