Sunil Dutt listening to Hindi film star Nalini Jaywant speaking Radio Ceylon |
B. V. Keskar பி வே கேஸ்கர் நேருவின் அமைச்சரவையில் செய்தி ஒலிபரப்பு ராஜாங்க அமைச்சராக இருந்தவர் இவர். வாரணாசி சம்ஸ்கிருத வித்தியா பீடத்தில் விரிவுரையாளராக இருந்தவர் . அந்த சம்ஸ்கிருத பார்ப்பனீய கோட்பாடுகளை அமைச்சராக இருந்த போது அமுல் படுத்தியவராகும்.
ஹிந்தி
வாசிக்க, பேசத் தெரிந்த ஒரு நான்கு பேரை அறிவிப்பாளர்களாக வேலைக்கமர்த்தி,
ஹிந்தி இசைத் தட்டுகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து, இந்திய
நேயர்களுக்காக இலங்கை வானொலி களம் அமைத்துக் கொடுத்தது. விளம்பரங்கள்
வாயிலாகப் பல லட்சம் ரூபாஇகளை அதனால் ஈட்ட முடிந்தது. போட்டிக்கு வேறு
வானொலிகள் இல்லாத காரணத்தால் ;ரேடியோ சிலோனே' தனிக்காட்டு ராஜாவாக கோலோச்ச
முடிந்ததது. அடுத்த 20 ஆண்டுகளாக அதன் காட்டில் பண மழையும் பாராட்டுகளும்
கொட்டோ கொட்டென்று கொட்டின..
தமது வானொலிகள் மூலம் கேட்க முடியாத
ஹிந்தி,தமிழ்ப் பாடல்களுக்காக, இந்திய நேயர்கள் இலங்கை வானொலியைத்
தஞ்சமடைந்தனர். பின்நாளில் 'மதர் இந்தியா'[1957] திரைப்படம் மூலம் ஒரு
நடிகராக ஆனவரும் பிரபல நடிகை நர்கீஸின் கணவரும், நடிகர் சஞ்சய் தத்தின் தந்தையுமான சுனில் தத்தும் 50களில் இலங்கை வானொலியின் ஹிந்தி ஒலிபரப்பில் அறிவிப்பாளராக இருந்தவர்களுள் ஒருவர்.
பின்னர்
இந்தியாவில் ஒலிபரப்பு சம்பந்தமான தடை அகற்றப்பட்டு, 70களில் fm வானொலிகள்
அறிமுகமாகிக் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களைத் தம்பாலீர்த்து இந்திய
வானொலிகள் தம்மை நிலை நிறுத்தும்வரை இந்நிலைமை தொடர்ந்தது.
பழைய
தமிழ்ப் பாடல்களைத் தாங்கள் இலங்கை வானொலி மூலமே கேட்டு ரசித்ததாக
இன்றையத் திரையுலகப் பிரபலங்கள் கூறி வருவதன் காரணமும் இதுதான்.
இசைத்தட்டுகள் வெளியான ஆரம்ப காலத்திலேயே சேகரிக்கப்பட்டு, முறையாகக்
களஞ்சியப் படுத்தப்பட்டு வந்த காரணத்தினால், மிகப் பழைய ஹிந்தி, தமிழ்
இசைத் தட்டுகளைக் கொண்ட களஞ்சியசாலையை [Record Library] இலங்கை வானொலி
கொண்டுள்ளது. ஆயினும் அதன் அருமை உணரப்பட்டு அதனைப் பூரணமாக இன்றைய
இ.ஒ.கூ.தாபனம் பயன் படுத்துகிறதா என்றால் விடை கேள்விக்குறிதான்.
இலங்கை
வானொலியில் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப் பட்ட ஆரம்ப காலத்தில், அதாவது
50களில் சிங்களத் திரைப்படப் பாடல்கள் மிகச் சொற்பமாகவே வெளிவந்திருந்தன.
1947இல் தான் முதற் சிங்களப் படமான 'கடவுனு பொருந்துவ' [Broken Promise]
வெளியானது. 1952வரை மொத்தம் 14படங்கள் மட்டுமே. அதேவேளை தமிழைப் பொறுத்த
மட்டில் 1931-1952 வரை மொத்தமாக 510 படங்கள் வெளிவந்திருந்தன. செய்திகளை
மட்டும் சொல்லிக் கொண்டிருந்த வானொலி வேறு நிகழ்ச்சிகளையும் நடாத்த
ஆரம்பித்த வேளையில் பொழுது போக்குக்காக திரைப் படப் பாடல்கள் தாம்
கைகொடுத்தன.
காலையில்
ஒரு மணி நேரமும் மாலையில் ஒரு மணி நேரமும் என தமிழ், சிங்கள, ஆங்கில
சேவைகளில் பாடல்கள் இடம்பெற்றன. தமிழைப் பொறுத்த மட்டில் போதுமான இசைத்
தட்டுகள் கைவசமிருந்தன. சிங்களத்தில் 14 படப் பாடல்களும் [படத்துக்குப் 10
எனக்கொண்டாலும்] மொத்தம் 140 தான் தேறும். அவற்றை ஒலிபரப்ப ஒரு வாரம்
போதும். பின்னர் போட்டதையே மீளப் போட்டுப் பட்டையடிக்க வேண்டியதுதான். அது
முடியாத காரியம். அதனால் அதற்கு மாற்றாக, சிங்கள சேவை ஹிந்திப் பாடல்களைத்
தத்தெடுத்துக் கொண்டது. விரும்பியோ விரும்பாமலோ இந்திப் பாடல் ரசிகர்களாக
சிங்களவர்கள் மாறிவிட்டார்கள். மறைமுதல்வன் வலைப்பக்கத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக