ஞாயிறு, 3 ஜனவரி, 2021

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இனி எந்த உற்சவமும் நடைபெறாது - கோவில் நிர்வாகம் ... வடகலை, தென்கலை அடிதடி !

 

/tamil.news18.com : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இனி எந்த உற்சவமும் நடைபெறாது, திருவாராதன பூஜைகள் மட்டுமே நடக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அத்திவரதர் கோவிலான வரதராஜ பெருமாள் கோவிலில், வேத பராயணம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினரிடம் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பிட்ட இடங்களில் தென்கலையும், குறிப்பிட்ட இடத்தில் வடகலையும் பாசுரம் படிக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

இந்நிலையில் இராப்பத்து உற்சவத்தின் ஏழாவது நாளான நேற்று, கோவிலுக்குள்ளேயே சாமி புறப்பாடு நடைபெற்றது. அப்பொழுது பெருமாளின் முன்பு பாசுரம் பாட முயன்ற தென்கலை பிரிவினரை, வடகலை பிரிவினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் பிடித்து தள்ளிக்கொண்ட நிலையில், போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் பிரித்துவிட்டனர்.Image may contain: text that says 'VADAKALAI THENKALAI'

 விடுதலை":  " வடகலை - தென்கலை அடிதடி ! - -  காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோவிலில் நேற்று (01.01.2021) நடைபெற்ற பெருமாள் இராப்பத்து கடவுள் ஊர்வலத்தில் அங்கே திரண்ட   வைணவ பக்தர்கள்தான் ஹிந்து மதத்தின் வைணவம் - சைவம் என்ற பிரிவில், வைணவத்தின் உட்பிரிவு வடகலை, தென்கலை (பாதம் வைத்த நாமம் போடுவோர்; பாதம் வைக்காத நாமம் போடுவோர்)   இடையே பெரும்  அடிதடி சண்டை - போலீசார் விலக்கி விட்டும் நடந்த காட்சி சில தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டு, ஹிந்து மதம் என்ற சனாதன ஆரிய மதம் எவ்வளவு மக்களை ஒற்றுமைப்படுத்தும் மதம், சகிப்புத் தன்மைக்கே பெயர் போன மதம் என்பதை நாட்டுக்குப் பறைசாற்றியதாக அமைந்தது!

வடகலை, தென்கலை நாமம்பற்றி விசாரித்த நீதிபதிகளுக்கு, வெள்ளைக்காரர்களுக்கு லண்டன் பிரிவி கவுன்சிலில் விளங்கவில்லை. எளிதில் விளக்க - வாதாடிய வக்கீல் சொன்னார் ‘‘இது Y எழுத்துக்கும் U எழுத்துக்குமான சண்டை'' என்றார்!
150 ஆண்டுகளுக்குமேல் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் யானைக்கு எந்த நாமம் போடுவது என்ற வழக்கு கோர்ட்டுகளில் இன்னமும் நிலுவையில் உள்ளது. இதற்குள்
3 யானைகள் செத்துப் போய்விட்ட பிறகும், வழக்கு முடியவில்லை!
இனிமேல் வரதராஜப் பெருமாள் கோவிலில் இந்த ஆண்டு எந்த உற்சவமும் நடைபெறாது என்று நிர்வாகம் அறிவித்துள்ளது!
என்ன வினோதம் பாரு!
எவ்வளவு ஜோக்கு பாரு!!
*நன்றி : "விடுதலை" நாளேடு 02-01-2021*

கருத்துகள் இல்லை: