Vijayaragavan Rajasekaran : ·
அதிமுக பாஜக கூட்டணி குறித்து பல்வேறு ஹேஷ்யங்கள் உலா வருகின்றன. அதில் பல திடுக்கிடும் செய்திகளும் அடங்கி இருக்கின்றன.
பாஜக தனக்கு பாதிக்கு பாதி (117 + 117 தொகுதிகள்) கொடுக்க சொல்லி வறுபுறுத்துவதாக கூறுகிறார்கள். தங்கள் பங்கில் அவர்கள் தங்களுக்கு போக மீதியுள்ள இடங்களில் பாமக, தேமுதிக, தமாக, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி போன்ற கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுப்பார்கள். அதாவது அதிமுகவோடு எந்த கூட்டணி கட்சிகளும் நேரிடையாக சம்பந்தம் வைத்துக் கொள்ளக் கூடாது. அதிமுக ஆட்சி அமைத்தால் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். இது வரை பாஜகவின் இந்த திட்டத்தை அதிமுக ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு வேளை இந்த பேச்சு வார்த்தை முறியுமானால் பாஜக பாமக தேமுதிக புத பு நீ க போன்ற கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும். தமாக நிலை குறித்து இன்னும் தெரியவில்லையாம். எம்பி பதவி கொடுத்ததால் அநேகமாக அதிமுகவின் விழியசைவில் அது இயங்கலாம்.
இன்னொரு திட்டமும் கைவசம் இருக்கிறதாம். பாஜக தனி அணியானால் சசிகலா ஓபிஎஸ் மூலம் அதிமுகவை பிளவு படுத்தி இரட்டை இலையை முடக்கும் எண்ணமும் இருக்கிறதாம். டிடிவியின் மௌனத்தை பலரும் சந்தேக கண் கொண்டு பார்ப்பதற்கு இதுதான் காரணம்.
இரட்டை இலை முடக்கப்பட்டால் திமுக இரண்டு கோணங்களில் சிந்திக்கும். தனி சின்னத்திற்காக முரண்டு பிடிக்கும் கூட்டணி கட்சிகளை கழற்றியும் விடலாம் அல்லது தனி சின்னத்தில் நிற்க அனுமதியும் கொடுக்கலாம்.
தேர்தல் நேரத்தில் பாஜக திமுகவிற்கு பலவிதங்களில் அழுத்தம் கொடுக்கவே முனைகிறது. ஆனால் அவை எல்லாம் திமுகவிற்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாகவே முடிகிறது.
ஏன் சார் வர வர உங்க பனிஷ்மென்ட் (punishment) எல்லாம் ட்ரீட்மென்ட்டாகவே (treatment) இருக்கிறது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக