Vivekanadan T : · முதலில் மூன்று விஷயங்களை இதன் பின்னணியில் இருந்து கவனிக்க வேண்டும்.. 1. இந்தியாவில் முகநூல் – ஜியோ கூட்டணியுடன் , அமெரிக்க ஊடங்ககள் வெளிப்படுத்திய முகநூல் தலைமைக்கும் பிஜேபி கட்சிக்கும் இருக்கும் secret கூட்டும் ஹிந்துத்துவா ஆதரவான போக்கும் , இதை வைத்தே வாட்ஸாப்ப் வெளிட்ட இந்த அயோக்கியத்தனத்தை பார்க்கவேண்டும்....
2. 2015 ஆண்டு வாட்சப் நிறுவனத்தை வாங்கிய முகநூல் நிறுவனம், அதற்கு முன்னரே , 2012 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் ஆப்பை முகநூல் நிறுவனம் வாங்கி விட்டது....... போன டிசம்பர் மாதம் அமெரிக்க கூட்டமைப்பு வர்த்தகக் கமிசன் மற்றும் 48 மாநிலங்கள் இணைந்து ஃபேஸ்புக் நிறுவனம் அனைத்து சமூக வலைத்தளப் பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தி சந்தை ஏகபோகமாக மாறுவதற்கு எதிராக வழக்கு தொடுத்தனர்.(US govt, 48 states sue Facebook for abusing power to crush smaller rivals - Accusing it of anti-competitive conduct by abusing its market power to create a monopoly and crushing smaller competitors)..securemessagingapps. link
Syed Mehathab Buddeen : எனக்கு தெரிந்த அனைவரையும் இதற்கும் Wicker Me க்கும் VERO True Social க்கும் வாங்க வாங்க என்று அழைத்து கொண்டே இருக்கிறேன் ஏறத்தாழ இரண்டு வருடங்களாக ஆனால்...
Vivekanadan T : Syed Mehathab Buddeen Signal and Telegram பற்றிய உங்கள் அனுபவ கருத்து என்ன..?
Syed Mehathab Buddeen : Vivekanadan T Signal என்பது WhatsApp பை விட அதிகப்படியான 100% பாதுகாப்பானது ஆரம்பத்தில் சிறிய அளவில் ஒவ்வாமை இருக்கலாம் சிக்னலை முதலில் உபயோகிக்கையில் ஆனால் தகவல் பாதுகாப்பு விடயம் என்பதில் சிக்னல் என்னுடைய முதல் சாய்ஸ். Wicker Meயில் ஒரு வாரத்தை தாண்டி தகவல்கள் இருக்காது என்பது ஒரு பெரும் குறை. Telegram ஒரு பொது உலவி அது முற்றிலும் வேறுபட்ட ஒரு சூழலை கொண்டது பாதுகாப்பு என்பது வாட்சப்பை விட மிக குறைந்தது அதனால் அதை நான் பரிந்துரைப்பது கிடையாது தோழர்..
Syed Mehathab Buddeen : Miller Palaniswamy தற்போதைக்கு வாட்சப்பில் ஸ்கிரின் செக்குரிட்டியை தவிர மற்ற விடயங்கள் வந்துவிட்டன ஆனாலும் அது பாதுகாப்பானது கிடையாது. இதற்கெல்லாம் தலைச்சிறந்த ஒன்று இருந்தது பிளாக்பெர்ரி எனும் அரக்கன் உண்மையில் அதுதான் இதுவரையிலான சிறந்த பாதுகாப்பு முறைமைகள் கொண்டு இருந்தது பயன்பாட்டாளர்களுக்கு என்று....
Miller Palaniswamy : Syed Mehathab Buddeen well said, ஆனால் காலத்திற்கு ஏற்ப தன்னை உடனடியாக மாற்றிக்கொள்ளாதால், முக்கியமாக தொடுதிரை கொண்டு வருவதில் மிகுந்த கால தாமதம், அந்தந்த நாடுகளின் பாதுகாப்பு கொள்கைகளுக்கு மதிப்பளிக்காதது போன்றவற்றால், blackberry தன் மார்க்கெட்டை இழந்தது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக