செவ்வாய், 5 ஜனவரி, 2021
சென்னையில் 105 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரியில் கொட்டி தீர்த்த கனமழை
maalaimalar சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இடைவிடாமல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும். அந்த வகையில் வடகிழக்கு பருவமழை காலம் நிறைவு பெற்றதாக கூறப்பட்டாலும், கிழக்கில் இருந்து தொடர்ந்து காற்று வீசி வருவதால் பருவமழை இன்னும் நிறைவு பெறவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
அதன்படி, வருகிற 12–ந்தேதி வரை தமிழகத்தில் ஆங்காங்கே வடகிழக்கு பருவமழை தொடரும் என்றே தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என்று ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக