தமிழகத்தில், 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதற்கு தடை நீடித்ததால், பல திரையரங்குகள் செயல்படவில்லை.
தற்போது தமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கொரோனா கால வழிமுறைகளை பின்பற்றி, திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படங்களை
திரையிடுவதற்கு முன்னதாக, எல்லா திரையரங்குகளிலும் கொரோனா விழிப்புணர்வு
செய்திகள் வெளியிடப்படவேண்டும் என்றும் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த
டிசம்பர் மாதம் திரையரங்குகள் 50 சதவீத பார்வையா
ளர்களை அனுமதித்து
செயல்படலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டபோதும், திரையரங்கு உரிமையாளர்கள்
தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பல கட்டமாக அதிகாரிகள் மற்றும்
அமைச்சர்களிடம் பேசி வந்தனர்.
முன்னதாக,
எதிர்வரும் பொங்கல் திருநாளின் போது வெளியாகவுள்ள படங்கள் 100 சதவீத
பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி தரவேண்டும் என நடிகர்
விஜய் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தது
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக