கொள்ளப்பட்டிருக்கிறது மேற்கு நாடுகளில் இந்த பருப்பு வேகாது. தனிப்பட்ட ரீதியில் ஒருவர் சட்டத்திற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்பதே பெரிதும் எதிர்பார்ப்பார்கள் ஒருவர் ஏழையாக இருந்தால் அவர் ஏன் அரசியலில் நேரத்தையும் சக்தியையும் வீணாக்குகிறார்? முதலில் தனது வாழ்வை வளம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடலாம் என்பது போன்று சிந்திப்பார்கள் மேலும் ஒருவர் உண்மையாகவே நேர்மையானவராக எளிமையானவராக இருந்தாலும் அவர் சமூக பிரச்சனைகளில் எந்த நிலைப்பாட்டை எடுக்கிறார் என்பதையே அளவுகோலாக கருதுவார்கள்
குஜராத் படுகொலைகளை கண்டுகொள்ளாமல் விட்டாலும், அந்த கொலைகாரர்கள் உலக அரங்கில் தப்பிவிட உதவி புரிந்தாலும் மறைந்த அப்துல் கலாம் அய்யா ரொம்ப எளிமையானவர் தனிப்பட்ட வாழ்வில் நேர்மையானவர் என்று கூறினால் காறி உமிழ்வார்கள் .
இதுதான் இந்திய சமூகத்தில் புரையோடி இருக்கும் தவறான சிந்தனை என்று எண்ணுகிறேன்.
பொதுவாழ்வில் இருக்கும் ஒருவர் பொது பிரச்சனைகளில் எப்படி சிந்திக்கிறார் எப்படி பேசுகிறார் எப்படி இயங்குகிறார் என்பதை கொண்டுதான் அவர் யார் என்பதை கணக்கிடுவார்கள்.
காங்கிரஸ் கக்கன் |
எல்லா அக்கிரமங்களுக்கும் வெள்ளை பெயிண்ட் அடிப்பதற்கு அவர் உதவி செய்தாலும் அவர் ரொம்ப நல்லவர் ஈ எறும்புக்கு கூட தீங்கு கருதத்தவர் வீணை வேறு வாசிக்க தெரிந்தவர் என்றெல்லாம் கதை அளந்தால் கூமுட்டை அடிப்பார்கள் .
இதே போன்றதொரு நிலைதான் அந்த கால சங்கியும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மக்களை சுட்டு கொன்ற கக்கன் என்று கூறப்படும் அந்த எளிமையான மனிதர் மீதும் உள்ளது .
இன்றைய உதாரணம் திரு நல்லகண்ணு அய்யா ..இவருக்கும் இது ஓரளவு பொருந்தும்
இந்த எளிமை வியாதியை இனம் கண்டு கொள்ளாமல் விட்டால் இன்னும் பல சங்கிகள் எதிர்காலத்தில் தோன்றும் அபாயம் உள்ளது செல்லபுரம் வள்ளியம்மை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக