அப்போது நடந்த பயங்கர கலவரத்தில், நான்கு பேர் உயிர் இழந்தனர்; பலர் காயம் அடைந்தனர். இவ்வளவு நடந்ததற்கு பின், அதிபர் பதவியை, ஜோ பைடனுக்கு விட்டுக் கொடுக்கும் வகையில், அதிகார மாற்றத்துக்கு, டொனால்டு டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கு, கடந்தாண்டு, நவ., 3ல் நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வென்றார். 'பாப்புலர் வோட்' எனப்படும், மக்களின் நேரடி ஓட்டுகளில், 70 லட்சம் வித்தியாசத்தில், குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டிரம்பை, அவர் வென்றார். 'எலக்டோரல் காலேஜ்' எனப்படும், மாகாணப் பிரதிநிதிகளின் ஓட்டுகளில், 306 - 232 என்ற அடிப்படையிலும், பைடன்
வென்றார். வரும், 20ம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். துணை அதிபராக, இந்தியாவை பூர்வீகமாக உடைய, கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளார்; இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகளை, அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். தேர்தலில் மோசடி நடந்ததாக அவர் தொடர்ந்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக