வியாழன், 7 ஜனவரி, 2021

மருத்துவத்துறை சீரழியவில்லை ! அரசுடமை , தனியார்மயம் குறித்த பதிவு!

Image may contain: text that says 'Elam Barithi மருத்துவம் தவிர மற்றதை தனியார் மயம் ஆக்கலாம் Like Reply 3m Mariano Anto Bruno அதாவது Elam Barithi சார் இப்ப 70000 ரூபாய் சம்பாதிக்கிறார் எனவே அவரால் தனியார் பேருந்தில் செல்ல முடியும் தனியாரிடம் மின்சாரம் வாங்க முடியும் ஆனால் அவரால் தனியார் மருத்துவமனை கட்டணம் செலுத்த முடியாது எனவே அவருக்கு தேவைப்படுவதில் அவரால் காசு கொடுக்க முடியாததை மட்டும் அரசு குறைந்த செலவில் தரவேண்டும் ஆனால் அவரால் காசு கொடுக்க முடிவதை தனியார்மயமாக்க வேண்டும் இந்த சுயநலம் தான் இந்த குணம் தான் சார் பிசாசு Like Reply 1m'
Mariano Anto Bruno : · மருத்துவத்துறை சீரழிந்து விட்டது பாஸ் என்ன ஆச்சு, முதலில் நாய்கடிக்கு மருந்து இருந்தது, இப்ப இல்லையா அது இல்லை இப்பத்தான் மருந்து இருக்கிறது ஆனாலும் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது பாஸ் என்ன ஆச்சு, முதலில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிறைய மாத்திரை இருந்தது, இப்ப இல்லையா அது இல்லை இப்பத்தான் நிறைய மருந்து இருக்கிறது
ஆனாலும் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது பாஸ்
என்ன ஆச்சு, முதலில் 25 மருத்துவக்கல்லூரி இருந்தது இப்ப இல்லையா
அது இல்லை
இப்பத்தான் நிறைய மருத்துவக்கல்லூரி இருக்கிறது
ஆனாலும் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது பாஸ்
என்ன ஆச்சு, முதலில் அனைத்து மாவட்டங்களிலும் சிடி ஸ்கேன் இருந்தது இப்ப இல்லையா
அது இல்லை
இப்பத்தான் நல்லாயிருக்கு
ஆனாலும் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது பாஸ்
என்ன ஆச்சு, முதலில் பிரசவ கால இறப்பும் பச்சிளம் குழந்தைகள் இறப்பும் குறைவாக இருந்தது, இப்ப அதிகரித்துள்ளதா
அது இல்லை
இப்பத்தான் நல்லாயிருக்கு
ஆனாலும் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது பாஸ்
என்ன ஆச்சு, முதலில் அனைத்து மாவட்டங்களிலும் தலைக்காயத்திற்கு வைத்தியம் இருந்தது, இப்ப இல்லையா
அது இல்லை
இப்பத்தான் நல்லாயிருக்கு
ஆனாலும் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது பாஸ்
என்ன ஆச்சு, முதலில் சிடி ஸ்கேன் எடுக்க 10 நிமிஷம் இப்ப 1 மணிநேரமா
அது இல்லை
இப்பத்தான் நல்லாயிருக்கு
ஆனாலும் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது பாஸ்
என்ன ஆச்சு, முதலில் எல்லா ஊரிலும் ஆஞ்சியோ பண்ணமுடியும் இப்ப முடியாதா
அது இல்லை
இப்பத்தான் நல்லாயிருக்கு
ஆனாலும் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது பாஸ்
என்ன ஆச்சு, முதலில் கேன்சருக்கு வைத்தியம் இருந்தது இப்ப இல்லையா
அது இல்லை
இப்பத்தான் நல்லாயிருக்கு
ஆனாலும் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது பாஸ்
என்ன ஆச்சு, முதலில் லேசர், எண்டோஸ்கோப்பி எல்லாம் இருந்தது இப்ப இல்லையா
அது இல்லை
இப்பத்தான் நல்லாயிருக்கு
ஆனாலும் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது பாஸ்
என்ன ஆச்சு, முதலில் ஆஸ்பத்திரியிலேயே பிறப்பு சான்றிதழ் தந்தார்கள் இப்ப நீங்க கார்ப்பரேஷன் போகனுமா
அது இல்லை
இப்பத்தான் நல்லாயிருக்கு
ஆனாலும் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது பாஸ்
என்ன ஆச்சு, முதலில் பிறவியிலேயே காது கேட்காமல் பிறந்த குழந்தைகளுக்கு காக்ளியார் இம்ப்ளாண்ட் இருந்தது, இப்ப இல்லையா
அது இல்லை
இப்பத்தான் நல்லாயிருக்கு
ஆனாலும் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது பாஸ்
ஒரு pilorumமும் இல்லை
சீரழிந்து இருப்பது உன் புத்திதான்
உனக்கு தான் பொறாமையும், வன்மமும், வக்கிரமும், பேராசையும்
நீ அம்மா கேண்டினில் தாஜ் கோரமண்டலின் வசதியையும், தாஜில் அம்மா கேண்டினின் கட்டணத்தையும் எதிர்பார்க்கிறாய்
அது இல்லை என்றவுடன்
அம்மா கேண்டினில் நிற்க வைத்தே சாப்பிடச்சொல்கிறார்கள் என்று புகார் கூறுகிறாய்
தாஜ் சென்று அவர்கள் கொள்ளை அடிக்கிறார்கல் என்று புகார் கூறுகிறாய்
உனக்கு
காசு செலவழிக்காமல் 5 நட்சத்திர வசதி வேண்டும்
மற்றும்
5 நட்சத்திர வசதி இருக்கு இடத்தில் கட்டணம் கேட்கக்கூடாது
இது தான் உன் பிரச்சனை
நீ சீரழிவு என்று பட்டியல் போடுவது எல்லாம்
ஒன்று
தனியாரில் கட்டணம் கூடிவிட்டதே என்ற புலம்பல்
அல்லது
அரசில் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதே என்ற புலம்பல் மட்டுந்தான்
எனவே
மருத்துவத்துறை எல்லாம் சீரழியவில்லை
சீரழிந்து இருப்பது உன் பேராசை, வன்மம், வக்கிரம், பொறாமை பிடித்த மனசு தான்
மாற வேண்டியது நீதானே தவிர
அரசோ, மருத்துவர்களோ அல்ல
புரியுதா
(பின் குறிப்பு :
அனைத்து மருத்துவர்களும் உத்தமமா, யாரும் தவறே செய்யவில்லையா என்று உடனே குதித்த வேண்டாம்
சற்று அமர்ந்து
உங்கள் குற்றச்சாட்டுகளை எல்லாம் வரிசையாக எழுதுங்கள்
ஒவ்வொன்றிற்கும் காரணம் என்ன என்று எழுதுங்கள்
அதில்
எத்தனைக்கு காரணம் மருத்துவத்துறை, எத்தனைக்கு காரணம் உங்கள் பேராசை என்று பாருங்கள் )
Actually
We have improved in each and every parameter
We have improved in Primary Care, Secondary Care, Tertiary Care and Quarternary Care
We have made healthcare more available, more accessible and more affordable
Yet
Just because the bill is a little high, these perverts use the word சீரழிந்து விட்டது as if everything has gone down

கருத்துகள் இல்லை: