Metronews :யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இராணுவத்தினரோ, பொலிஸாரோ இடித்தழிக்கவில்லை. இதற்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இச்சம்பவத்தை காரணம் காட்டி பிரச்சினைகளை ஏற்படுத்த இடமளிக்க முடியாது. ஆகவே யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்து தகர்த்தப்பட்டுள்ளமை தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரயாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டே பல்கழைக்கழக நிர்வாகம் அதனை அகற்றியுள்ளது.
இச்சம்பவத்தை தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது என குறிப்பிட்டு இல்லாத பிரச்சினையை தோற்றுவிக்க முனைகிறார்கள்.
இச்சம்பவத்தை காரணம் காட்டி வடக்கில் ஆரப்பாட்டங்களை எத்தரப்பினரும் முன்னெடுக்க முடியாது. வடக்கில் பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் இவ்வருடம் உறுதியான தீர்மானம் எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட அமைப்பின் நினைவுகளை மீட்டுவது தேசிய பாதுகாப்புக்கு ஒருகாலத்தில் ஏதாவது ஒரு வழிமுறையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக