tamil.indianexpress.com
ஆன் லைனில் அள்ளிக் கொழிக்கும் தமிழ் ராக்கர்ஸ்: இந்தி, தெலுங்கு ஹிட் படங்களும் தப்பவில்லை; இந்தி,
தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என எந்த மொழியின் புதுப் படங்களும் தமிழ்
ராக்கர்ஸின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை
தமிழ் ராக்கர்ஸ் என்கிற ஒற்றை இணையதளம், கோலிவுட் முதல்
ஹாலிவுட் வரை அத்தனை மொழிப் படங்களையும் பந்தி வைக்கிறது. ஆன் லைனில்
இதற்கு எகிறி வரும் ரசிகர்கள் கூட்டம், நிஜமாகவே சினிமாத் துறைக்கு
சவால்தான்.
புதுப் படங்களை தியேட்டரில்தான் பார்க்க வேண்டும் என்கிற நிலையை, தமிழ் ராக்கர்ஸ் மாற்றிவிட்டது. இந்த இணையதளம் திருட்டுத்தனமாக படங்களை ஆன் லைனில் ரிலீஸ் செய்து சினிமாக் காரர்களை நோகடித்து வருகிறது.
;சினிமா தொழில் பெரும் சிரமங்களை சந்தித்து வருவது நிஜம்.
பெயரில் தமிழைக் கொண்டிருந்தாலும், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம்
என எந்த மொழியின் புதுப் படங்களும் தமிழ் ராக்கர்ஸின் பிடியில் இருந்து
தப்ப முடியவில்லை. சில படங்களை ரிலீஸ் ஆன சில மணி நேரங்களில் இணையதளத்தில்
திருட்டுத்தனமாக ரிலீஸ் செய்து விடுகிறது தமிழ் ராக்கர்ஸ்.புதுப் படங்களை தியேட்டரில்தான் பார்க்க வேண்டும் என்கிற நிலையை, தமிழ் ராக்கர்ஸ் மாற்றிவிட்டது. இந்த இணையதளம் திருட்டுத்தனமாக படங்களை ஆன் லைனில் ரிலீஸ் செய்து சினிமாக் காரர்களை நோகடித்து வருகிறது.
;சினிமா தொழில் பெரும் சிரமங்களை சந்தித்து வருவது நிஜம்.
தமிழ் ராக்கர்ஸால் சினிமா தொழில் பெரும் சிரமங்களை சந்தித்து வருவது நிஜம். பல கோடி முதலீடு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பை நிமிடத்தில் சுரண்டி கொழிக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.
புதுப்படங்களை திருட்டுத்தனமாக தமிழ் ராக்கர்ஸின் பார்க்கும் கூட்டத்தின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு விளம்பரதாரர்களும் பெருகி வருகிறார்கள். இதனாலே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் செழித்துக் கொழிக்கிறது.
என்னதான் நீதிமன்றத் தீர்ப்பு, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை என மிரட்டினாலும், தனது இணையதள முகவரிகளில் சிறுசிறு மாற்றங்களை செய்துகொண்டு தமிழ் ராக்கர்ஸ் சக்கை போடு போடவே செய்கிறது.
தமிழ் ராக்கர்ஸை பார்க்கிறவர்கள் சொல்கிற ஒரே நியாயம், தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்களில் விலை உயர்வும், பார்க்கிங் முதல் பாப் கார்ன் வரை தாறுமாறான கட்டணமும்தான். ஆனாலும் ஒரு அநியாயத்திற்கு இன்னொரு அநியாயம் தீர்வல்ல.
லேட்டஸ்டாக வெளியான தெலுங்கு படம் மஜிலி, தமிழில் சூப்பர் டீலக்ஸ், ஐரா, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் மற்றும் டோட்டல் டமால் இந்திப் படம் உள்ளிட்ட அத்தனையும் தமிழ் ராக்கர்ஸில் வந்துவிட்டது திரைத்துறைக்கு பெரும் மிரட்டல். ஏதாவது ஒன்றை செய்து இதற்கு முடிவு கட்டினாலொழிய, திரையுலக எதிர்காலம் மங்கலாகிக் கொண்டுதான் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக