வியாழன், 11 ஏப்ரல், 2019

சிதம்பரம் : தேர்தலுக்கு பின் மாயாவதி காங்கிரஸ் கூட்டணி அரசில் இணைவார்.

zeenews.india.com : தேர்தலுக்கு பிறகு மாயாவதியுடன் காங்கிரஸ் கூட்டணி
அமைக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில்,  மோடி ஆட்சியில் நமது நாடு பாதுகாப்பாக இருந்தது போலவும், 2004-ல் இருந்து 2014 வரை மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது நாடு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது போலவும் கட்டு கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள் என தெரிவித்தார்.
மேலும் மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எந்த போரும் நடக்கவில்லை. போர் பதட்ட சூழ்நிலையும் ஏற்படவில்லை. எல்லை பாதுகாப்பான நிலையில் இருந்தது. பயங்கரவாதிகள் ஊடுருவல் குறைந்து இருந்தது. பாதுகாப்பு படை வீரர்கள், பொது மக்கள் உயிரிழப்பு குறைந்து இருந்தது.

ஆனால் மோடி ஆட்சியில் ஊடுருவல் அதிகரித்து உள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் பொது மக்கள் உயிரிழப்பு அதிகரித்து உள்ளது. எப்போதும் போர் பதட்ட சூழ்நிலை நிலவுகிறது. எல்லையில் வசிக்கும் 30 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
வரும் தேர்தலில் வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பாரதீய ஜனதாவுக்கு செல்வாக்கு இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுவதை தான் ஏற்கவில்லை எனவும், பொதுவாக கருத்து கணிப்புகளை தான் நம்புவதில்லை எனவும், கடந்த காலங்களில் கருத்து கணிப்புகள் பொய்யாகி உள்ளன எனவும் அவர் குறிபிட்டு பேசியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரை பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணி வலுவாக உள்ளது. காங்கிரஸ் அங்கு வலுவான நிலையில் போட்டியிடுகிறது. அங்கு பாரதிய ஜனதாவை முந்தி எதிர்பாராத வெற்றிகளை காங்கிரஸ் பெறும்,  உத்தரபிரதேசத்தில் தேர்தலுக்கு முன்பே கூட்டணி வைக்க முயற்சித்தோம். ஆனால் மாயாவதி அதை விரும்பவில்லை. தேர்தல் முடிந்ததும் எங்கள் அணிக்கு மாயாவதி வருவார், எங்களுடன் கூட்டணி அமைப்பார் எனவும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: