வெள்ளி, 12 ஏப்ரல், 2019

தமிழிசை சவுந்தரராஜன் : எதிர்கட்சிகள் ஸ்டெர்லைட் பிரச்னையை தூண்டுகிறார்கள் BBC க்கு பேட்டி..

BBC : ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற 13 பேர்
சுட்டுக்கொல்லப்பட்ட பிரச்சனையை எதிர்க்கட்சிகள் தூண்டிவிட முயற்சிக்கின்றன என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார். பிபிசி தமிழின் பிரமிளா கிருஷ்ணனுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து:
கேள்வி: நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, ஏழை மக்களுக்கு மாதம் ரூ.6,000 என வாக்குறுதிகளை தந்துள்ள திமுக-காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: அந்த அறிக்கை ஒரு ஏமாற்று வேலை. சாத்தியம் இல்லாத விஷயங்களை, வாக்குறுதிகளாக அவர்கள் கொடுக்கிறார்கள். இவர்கள் எவ்வளவு ஏமாற்று விஷங்களை சொல்கிறார்கள் என்பதற்கு இந்த தேர்தல் அறிக்கை சாட்சி. பாஜகவின் அறிக்கை மிகவும் நேர்த்தியான, உண்மையில் என்ன செய்ய முடியுமோ அதை சொல்லும் அறிக்கையாக உள்ளது.
கே: நீங்கள் சாதி வாக்குகளுக்காக இந்த தொகுதியை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுவது குறித்து உங்கள் கருத்து?

ப: நான் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவள். இங்குதான் படித்து, வளர்ந்தேன். என் பெற்றோர்களின் ஊர் இதுதான். எனது சொந்த ஊர் என்பது தூத்துக்குடி. என் ஊரில் போட்டியிடவேண்டும் என்பது என் விருப்பம். கூட்டணியில் இந்த தொகுதியை நாங்கள் கேட்டுப்பெற்றோம். e>சாதி வாக்குகளுக்காக நான் இங்கு போட்டியிடவில்லை. அப்படி நினைத்திருந்தால், இதற்கு முன்பு, சென்னையில் நான் போட்டியிட்டிருக்கமாட்டேன். தமிழகத்தின் தென் பகுதியைச் சேர்ந்தவள் என்பதுதான் காரணம். எதிரணி வேட்பாளர்(கனிமொழி) சாதி ரீதியான வாக்குகளுக்காக இந்த இடத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம். நான் ஒரு கட்சியின் மாநில தலைவராக இருக்கிறேன். தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் பல பகுதிகளுக்குச் செல்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன்.
கே: தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற தொகுதியின் முக்கிய பிரச்சனைகள் என்ன? ஸ்டெர்லைட் போராட்டத்தின் தாக்கம் எவ்வாறு இருக்கும்? <>ஸ்டெர்லைட் பிரச்னையை எங்கள் மீது தூக்கிபோடுகிறது திமுக. ஸ்டெர்லைட் விவகாரம் மற்றும் இந்த போராட்டங்களைப் பற்றி பேசி பேசி இங்கு வரும் முதலீடுகளை தடுக்கிறார்கள். ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்கள் இறந்தது உண்மையில் துரதிருஷ்டவசமானது. ஆனால் நாம் ஒன்று கூடி அதை தாண்டி வரவேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகள் அதை வைத்தே தூண்டிவிடவேண்டும் என்று எண்ணுகிறார்கள்.e>தூத்துக்குடி தொகுதியில் உள்ள மற்ற பிரச்சனைகளை யாரும் யோசிக்கவில்லை. இந்த தொகுதியில் தூத்துக்குடி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம்,ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதியும் தனிச்சிறப்பு உடையவை. வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தொழிற்சாலைகள், நீர் ஆதாரங்கள் பெருக்கப்படவேண்டும், தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டம் என்ற திட்டம் ஒன்றை மாநில அரசு செயல்படுத்தவுள்ளது. அதோடு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஒன்றும் இங்கு கொண்டுவரப்படவுள்ளது.தேர்தல் முடிந்த பின்னர் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இங்கு சுற்றுலா இடங்கள் பல உள்ளன. நவதிருப்பதி, நவகைலாசம், குலசேகரப்பட்டினம் கோயில், உலக புகழ்பெட்ரா பனிமாதா கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகிய ஆன்மிகதலங்கள் உள்ளன. மணப்பாடு பனிச்சறுக்கு வசதிகள் செய்யலாம் என சுற்றுலா நகரமாகவும், ஆன்மிக சுற்றுலா நகரமாக தூதுத்துக்குடி தொகுதியை முன்னேற்ற முடியும். இந்த தொகுதியில் போட்டியிடுவது உறுதியானவுடன், தொகுதியின் வளர்ச்சிக்கான திட்டத்தை வடிவமைத்தேன். இந்த பகுதியில் அபரிமிதமாக கிடைக்கும் வாழை, பனை, உப்பு, முருங்கை மற்றும் மீன் ஆகிய பொருட்களை பதப்படுத்த தொழிற்சாலை தேவை. இங்குள்ள இளைஞர்கள் பலர் படித்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க ஐடி பார்க் மற்றும் வேளாண்மை பொருட்களை சந்தைப்படுத்த ஒரு வணிக வளாகம் உருவாக்க வேண்டும். வான் வழி, ரயில், சாலை மற்றும் நீர்வழி போக்குவரத்து என நான்கு விதமான போக்குவரத்து வசதிகள் இங்கு உள்ளன. இது இங்குள்ள வர்த்தகத்தை மேம்படுத்த நல்ல வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடியை வளப்படுத்தும் நோக்கில் திட்டத்தை வடிவமைத்துள்ளேன்

கருத்துகள் இல்லை: