"75 promises for India@75," the party said the BJP ...
நக்கீரன் : சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
எடுக்கப்படும் .
மாலைமலர் : பாராளுமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய மந்திரியும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான ராஜ்நாத் சிங் வெளியிட்டார். புதுடெல்லி: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான களப்பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
தேர்தல் அறிக்கைகள் மூலம், மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பிரசாரம் மேற்கொண்டுள்ளன. காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, விவசாய கடன்கள் தள்ளுபடி, ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை மிஞ்சும் அளவுக்கு பாஜகவின் தேர்தல் அறிக்கை இருக்கும் எனவும், நாட்டின் வளர்ச்சி, தேச பாதுகாப்பு, விவசாயிகளின் வருவாய், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
முதற்கட்ட வாக்குப்பதிவு 11-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். உறுதிமொழி பத்திரம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த தேர்தல் அறிக்கையில், பாஜக அரசின் 5 ஆண்டு கால சாதனைகள் பற்றிய தகவல்களுடன், பல்வேறு புதிய மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
நடைமுறையில் சாத்தியமாகும் வகையில் பாஜக தேர்தல் அறிக்கையை தயாரித்திருப்பதாக ராஜ்நாத் சிங் கூறினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, கடந்த 5 ஆண்டுகளாக ஏழைகளின் அரசாக மத்திய பாஜக அரசு செயல்பட்டதாகவும், பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றியிருப்பதாகவும் கூறினார். மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் எவ்வித ஊழல்களும் நடைபெறவில்லை என்றும் கூறினார்
நக்கீரன் : சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
வட்டி இல்லாமல் ரூ.1 லட்சம் வரை குறுகிய கால விவசாய கடன்.
தீவிரவாதம் வேரோடு அழிக்கப்படும் வரை தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஜி.எஸ்.டி எளிமையான வடிவமைப்புக்கு மாற்றப்படும்.
பாதுகாப்புத்துறையில் உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த திட்டம்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்.
நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 100 லட்சம் கோடி.
காவல்துறை நவீனப்படுத்தப்படும்.
பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு.
ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின்கள்.
நாடு முழுவதும் 200 க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
கருப்பு பணத்திற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
சபரிமலையின் பாரம்பரியம் குறித்து உச்சநீதிமன்றத்திடம் எடுத்து கூறப்படும்.
நாடு முழுவதும் 50 நகரங்களில் மெட்ரோ ரயில்.
2022 க்குள் அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணையதள வசதி.
2024-க்குள் நாட்டில் மேலும் 200 கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகள் உருவாக்கப்படும்.

நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2022-க்குள் இரட்டிப்பாக்கப்படும்.
யோகாவை உலக அளவில் கொண்டுசெல்ல மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் .
மாலைமலர் : பாராளுமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய மந்திரியும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான ராஜ்நாத் சிங் வெளியிட்டார். புதுடெல்லி: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான களப்பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
தேர்தல் அறிக்கைகள் மூலம், மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பிரசாரம் மேற்கொண்டுள்ளன. காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, விவசாய கடன்கள் தள்ளுபடி, ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை மிஞ்சும் அளவுக்கு பாஜகவின் தேர்தல் அறிக்கை இருக்கும் எனவும், நாட்டின் வளர்ச்சி, தேச பாதுகாப்பு, விவசாயிகளின் வருவாய், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
முதற்கட்ட வாக்குப்பதிவு 11-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். உறுதிமொழி பத்திரம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த தேர்தல் அறிக்கையில், பாஜக அரசின் 5 ஆண்டு கால சாதனைகள் பற்றிய தகவல்களுடன், பல்வேறு புதிய மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
நடைமுறையில் சாத்தியமாகும் வகையில் பாஜக தேர்தல் அறிக்கையை தயாரித்திருப்பதாக ராஜ்நாத் சிங் கூறினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, கடந்த 5 ஆண்டுகளாக ஏழைகளின் அரசாக மத்திய பாஜக அரசு செயல்பட்டதாகவும், பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றியிருப்பதாகவும் கூறினார். மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் எவ்வித ஊழல்களும் நடைபெறவில்லை என்றும் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக