NDTV : மக்களவை
தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ்
கட்சி திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் கடந்த ஒரு மாதமாக
நீடித்து வந்த குழப்ப நிலை முடிவுக்கு வந்துள்ளது.
டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தனித்துப் போட்டியிட்டால் வாக்குகள் பிரிந்து பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகின. காங்கிரஸ் தரப்பில் எடுக்கப்பட்ட சர்வேயிலும், இதுபோன்ற நிலைதான் காணப்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்களும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோரும் ராகுல் காந்தியை சந்தித்து ஆம் ஆத்மி உடனான கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
ஆரம்பம் முதற்கொண்டே, கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு போன்ற மாநில கட்சி தலைவர்களுடன் கூட்டணி வைப்பதற்கு ராகுல் காந்தி ஆர்வம் காட்டவில்லை.
இருப்பினும் டெல்லி விவகாரத்தை கையாளுவதற்காகவும், ஆம் ஆத்மியுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி. சாக்கோ நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பேச்சுவார்த்தை நடத்தி 4 சீட்டுகளில் ஆம் ஆத்மியும், 3 சீட்டுகளில் காங்கிரசும் போட்டியிடும் என்ற முடிவுக்கு கொண்டு வந்திருந்தார். இதற்காக 6 ரவுண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த
நிலையில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் திட்டவட்டமாக
அறிவித்துள்ளது. அக்கட்சியுடன் கூட்டணி வைப்பது காங்கிரசின்
எதிர்காலத்திற்கு நல்லது அல்ல என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
கூறியுள்ளார். இதன் மூலம் ஒரு மாதமாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு
வந்துள்ளது.
டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தனித்துப் போட்டியிட்டால் வாக்குகள் பிரிந்து பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகின. காங்கிரஸ் தரப்பில் எடுக்கப்பட்ட சர்வேயிலும், இதுபோன்ற நிலைதான் காணப்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்களும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோரும் ராகுல் காந்தியை சந்தித்து ஆம் ஆத்மி உடனான கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
ஆரம்பம் முதற்கொண்டே, கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு போன்ற மாநில கட்சி தலைவர்களுடன் கூட்டணி வைப்பதற்கு ராகுல் காந்தி ஆர்வம் காட்டவில்லை.
இருப்பினும் டெல்லி விவகாரத்தை கையாளுவதற்காகவும், ஆம் ஆத்மியுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி. சாக்கோ நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பேச்சுவார்த்தை நடத்தி 4 சீட்டுகளில் ஆம் ஆத்மியும், 3 சீட்டுகளில் காங்கிரசும் போட்டியிடும் என்ற முடிவுக்கு கொண்டு வந்திருந்தார். இதற்காக 6 ரவுண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக