ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

ராகுல் காந்தி இனி பெரியாறு அணை பற்றி பேச மாட்டார்: தினகரன்

ராகுல் காந்தி இனி பெரியாறு அணை பற்றி பேச மாட்டார்: தினகரன்மீன்னம்பலம் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பரமசிவன் அய்யப்பன் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் அமமுக துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் நேற்று (ஏப்ரல் 6) இரவு திருமங்கலம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் நமது சகோதரர் பரமசிவன் அய்யப்பனை நீங்கள் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
இந்த துரோக கும்பலை, கால்பிடித்து அரசியலில் உயர்ந்தவர்களை, முதுகெலும்பு இல்லாதவர்களை முறியடிக்கும் விதமாக நீங்கள் பரமசிவன் அய்யப்பனை வெற்றிபெற செய்ய வேண்டும்.

காரணம், துரோகிகள் இந்தத் தேர்தலோடு அரசியலில் இல்லாமல் போய்விட வேண்டும். நம்மிடம் கூனிக் குறுகி நின்றவர்கள் இன்றைக்கு எப்படியெல்லாம் பேசுகிறார்கள். ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிடுவதால் இனி பெரியாறு அணை பற்றி பேசவே மாட்டார். காரணம், அவரால் அங்கு வெற்றிபெற முடியாது.
கர்நாடகத்தில் காவிரி பற்றி பேச மாட்டார்கள். ஏனென்றால், அங்கு ஓட்டு வேண்டுமென்றால் காவிரி பற்றி பேச முடியாது. அதனால்தான் அம்மா அவர்கள் எந்தவொரு தேசிய கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை. தமிழ்நாட்டின் நலன்கருதி தனிமையாகப் போட்டியிட்டார் அம்மா. அதேபோல் அவர்களது பிள்ளைகளாகிய நாம் இன்றைக்குத் தனித்துப் போட்டியிடுகிறோம்” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: