தினந்தந்தி :காஷ்மீரில் இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 370ஐ நீக்கும்
முடிவை ஏற்று கொள்ள மாட்டோம் என பாகிஸ்தான் கூறியுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 370 ஆனது அமலில் உள்ளது. இதனை நீக்க வேண்டும் என பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர். இதுபற்றி அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, காஷ்மீரில் இருந்து இந்த பிரிவை நீக்கும் முடிவில் உள்ளோம். ஆனால் மேலவையில் போதிய பெரும்பான்மை இல்லை. அதனால் இதனை மேற்கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார் என சில ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன. இதற்கு அங்குள்ள தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிரிவு 370 திரும்ப பெறப்பட்டால்
புதுடெல்லி மற்றும் மாநிலத்திற்கு இடையேயான உறவு முடிந்து விடும் என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
தனிப்பட்ட பலனுக்காக சில அரசியல் தலைவர்கள் பிரிவு 370ஐ ஒன்றுமில்லாமல் செய்கின்றனர் என உமர் அப்துல்லா கூறியுள்ளார். இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரி முகமது பைசல் கூறும்பொழுது, காஷ்மீரில் இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 370ஐ நீக்குவது என்பது ஐ.நா. அமைப்பு தீர்மானத்தினை மீறுவது ஆகும். எந்த சூழ்நிலையிலும் நாங்கள் இதனை ஏற்கமாட்டோம். காஷ்மீர் மக்களும் இதனை ஏற்று கொள்ளமாட்டார்கள் என்று கூறியுள்ளா&

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக