சனி, 13 ஏப்ரல், 2019

தேனியில் மோடி ... 600 பஸ்களில் கூலிக்கு வந்த 30ஆயிரம் மக்கள்!.. ரவீந்திரநாத்துக்கு பிரசாரம்


m
nakkheeran.in - sakthivel.m : தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ் -ன் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டி போடுகிறார்.   ஓபிஎஸ் மகன் அதிமுக சார்பில் போட்டி போடுவதை ஆதரித்து பாரதப் பிரதமர் மோடி தேனி அருகே உள்ள க. விளக்கு பகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்தார். மோடி தேர்தல்
பிரச்சாரத்துக்கு வருவதை ஒட்டி துணை முதல்வர் ஓபிஎஸ் தன் பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்து 650 பஸ்களை  தேனி மாவட்டத்திற்கு  இறக்கி அங்கிருந்து ஆட்களை< திரட்டி வர முடிவு செய்தார். அதன் பேரில் முதல் நாள் இரவே நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை பஸ்களை அனுப்பி அதிகாலையில் ஆறு மணிக்கெல்லாம் ஒரு பஸ்சுக்கு 50 பேர் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை திரட்டி ஆண்டிபட்டி க.விளக்கு பொதுக்கூட்டத்திற்கு கொண்டுவந்தனர். அதன் மூலம் தேனி முதல் ஆண்டிபட்டி வரை போக்கு வரத்தே ஸ்தம்பித்தது. தலைக்கு 500 ரூபாய் என கூலிக்கு ஆட்களை கொண்டு வந்து சாப்பாட்டு தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.  இப்படி கூலிக்கு ஆட்களை அழைத்து வரப்பட்ட மக்களோடு கட்சிக்காரர்களும் மோடியின் பிரச்சார மேடைக்கு முன் சாரை சாரையாக  வந்து அமர்ந்திருந்தனர்.

    ஆனால் நேரம் ஆகஆக  காலை வெயிலை தாங்க முடியாத மக்கள் தங்கள் சேலைகளை தலையில் போட்டு போர்த்திக்கொண்டும்   ஒரு துண்டைப் போட்டும் உட்கார்ந்திருந்தனர்.  சரியாக 11 மணிக்கு வந்த  பிரதமர்  மோடியை முதல்வர் எடப்பாடியும்  துணை முதல்வர் ஓபிஎஸ்சுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் வரவேற்றனர். 
m
m

     அதன் பின் பிரதமர் மோடியிடம் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டி போடும் லோகிராஜன் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டி போடும் மயில்வேல் மதுரை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரையும் திண்டுக்கல்  கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் முதல்வர் எடப்பாடி அறிமுகப்படுத்தி வைத்தார்.   அதோடு கன்னியாகுமரியில் போட்டி போடும் பொன் ராதாகிருஷ்ணனும் வந்து இருந்தார்.  

அப்போது பிரதமர் மோடியிடம் புகார் கொடுத்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்,  திடீரென காலில் விழுந்து வணங்கினார்.  அதை தொடர்ந்து மற்ற வேட்பாளர்களும் மோடியின் காலில் விழ போகவும் அதை உடனே தடுத்து அப்படி விழக்கூடாது என சைகை மூலம் மோடி வெளிப்படுத்தினார்.



.      அதன் பின் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசும்போது.. தமிழக மக்களுக்கு ஏராளமான செலவுகளை ஜெய் செய்து இருக்கிறார்.   அது போல் நாங்களும் தொடர்ந்து செய்து வருகிறோம் .   இந்த தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியை வேரோடு ஒழிக்க வேண்டும்.  பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார்.  அதனால் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.  இத் தொகுதியில் போட்டி போடும் ரவீந்திரநாத் குமார் மக்களுக்காக உழைக்க கூடியவர்.  அதுபோல் ஆண்டிபட்டியில் லோகிராஜனும் பெரியகுளம் மயில்வேலுக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் அதோடு கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு தரவேண்டும் என்று கூறினார். 


mஅதை தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடியோ... மேடையில் உள்ள ரவீந்திரநாத் குமார்,  லோகீசன்,  மயில்வேல் அதுபோல்  மதுரை, திண்டுக்கல் உள்பட கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் பெயரை எல்லாம் சொல்லி கட்டளைக்கும் கூட்டணி கட்சி சின்னங்களுக்கும் மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கூறினார்.  ஆனால் முதல்வரின் அருகே  உட்கார்ந்து இருந்த பொன் ராதாகிருஷ்ணன் பெயரை சொல்லவே மறந்துவிட்டார்.  அதன் பிறகு கடைசியில் தகவல் சொன்னதற்குப் பிறகு பொன்.ராதாகிருஷ்ணன் பெயரைச் சொல்லி தாமரைக்கு ஓட்டுப்போட மக்களிடம் ஆதரவு கேட்டார்.


m
அதை தொடர்ந்து பேசிய எடப்பாடியோ...தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகிறது .  அதன் மூலம் மோடி மீண்டும் புத்தாண்டில் பிரதமராக வர இருக்கிறார்.  இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களை காப்பாற்ற கூடிய மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் ஆனால் திமுக தலைவர் ஒருவர் மட்டுமே ராகுல் பிரதமராக வரவேண்டும் என்று கூறுகிறாரே தவிர மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாரும் அப்படி சொல்வதில்லை அங்குள்ள தலைவர்கள் எல்லாமே பிரதமராக வரவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார்கள் என்று கூறினார்.


 இறுதியாக பதினொன்னு முப்பதுக்கு பிரதமர் மோடி மேடை ஏறியோ மேடையின் முன்பாகவோ  கொளுத்தும் வெயிலையும் உட்கார்ந்திருந்த மக்கள் இருந்த சாரை சாரையாக  வெளியேறத் தொடங்கினார்கள்.  அதை கண்டு போலீசார் தடுத்து பார்த்தும் கூட அதை சட்டை பண்ணாமல் ஆயிரக்கணக்காண மக்கள் வெளியேறியதால் மேடையின் முன் போடப்பட்டு இருந்த சேர்களும் எங்கு  பார்த்தாலும் காலி  சேர்களாகத்தான் காட்சி அளித்தது.
இந்த மோடியின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு ஓபிஎஸ்-ன் குடும்பமே வந்து மேடையின் முன் பத்திரிக்கையாளர்களுக்கு போடப்பட்டிருந்த வரிசையில் உட்கார்ந்து இருந்தன

கருத்துகள் இல்லை: