வெள்ளி, 12 ஏப்ரல், 2019

ஒரு பார்ப்பனரின் கோரிக்கை : நீங்கள் வெறுக்கும் 'சூத்திரர்'களுக்கு மட்டும் இல்லை உங்களுக்கும் சேர்த்துதான்!

Aparajithan R : மார்கழிப் புரட்சி செய்த என் அன்பு மயிலாப்பூர் தோழர்களுக்கு...
நான் பிறப்பால் பார்ப்பன வைதீக குடும்பத்தைச் சார்ந்தவன். இதில் பெருமை எல்லாம் ஒரு மண்ணும் இல்லை. இதை சொல்லுவதற்கு காரணமுண்டு. முதலில் இடதுசாரிகள் எல்லாம் பார்ப்பனர்களுக்கு எதிரிகளைப்போல் சித்தரிப்பது மிகவும் மோசமான செயல்! எந்த ஆட்சிக்காலத்தில் மைலாப்பூரும் நங்கநல்லூரும் விறுவிறுவென வளர்ச்சி அடைந்தது என எல்லாருக்கும் தெரியும். பார்ப்பன சித்தாந்தம்தான் எதிரியே தவிர திராவிடக் கட்சி உங்களை என்றைக்குமே விரோதிகளாக பார்த்ததே இல்லை என்பதுதான் உண்மை. பெரும்பாலான பார்ப்பனர்களுக்கு துக்ளக் வசிக்கும் பழக்கம் இருக்கிறது. உங்கள் குருமூர்த்தி பொள்ளாச்சி சம்பவம் நடந்ததற்கு திராவிட கலாச்சாரம்தான் காரணம் என்று சொன்னதன் எதிர்வினைதான் கிருஷ்ணரைப் பற்றி பெரியார் திடலில் பேசியது! பார்ப்பனியத்தை எதிர்த்தாலும் ஒருபோதும் தமிழகத்தில் எந்தக் கோவில் மீதும் திமுகவோ திகவோ கை வைத்தது இல்லை. ஆனால் நீங்கள் பாரத் மாதாக்கி ஜே என்று சொல்லி ஆராதிக்கும் பாஜக, 'சப்கா சாத் சப்கா விகாஸ்' என்று சொல்லிவிட்டு பாபர் மஸ்ஜிதை இடித்தது. தமிழகத்தில் மதத்தின் பெயரால் எத்தனை கலவரம் இதுவரை நடந்திருக்கிறது?

உங்களுக்கு உங்கள் உடம்பில் இருக்கும் பூணூலை அறுத்ததற்கு கோபம் இருக்கலாம். ஆனால் பெரியார் தொடங்கி தலைமை பொறுப்பு வகித்த அத்தனை பேரும் அதைக் கண்டித்திருக்கிறார்கள். அதேசமயம் மாட்டு இறைச்சிக்காக எத்தனை இஸ்லாமியர்களை கொன்று குவித்திருக்கிறது இந்த அரசு... இங்கு அப்படி யாராவது பெரியாரின் பெயரை சொல்லி வன்முறை நடத்தியது உண்டா? இந்து இந்து என்று எல்லாம் பேச வேண்டாம். நமக்குத் தெரியும் யார் அந்த இந்து என்று! இன்றளவும் நிறைய பார்ப்பன வீடுகளில் பிற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு தனி டம்ளரில்தான் தண்ணீர் கொடுக்கப்படுகிறது. மாமிசம் சாப்பிடுவது கடவுள்கள் செய்வதுதானே? ஒரு இரண்டு மாதத்திற்கு முன்பு உறவினர் ஒருவர் என்னிடம் வீடு கேட்டார். அப்போது அவர் சொன்ன வார்த்தை, 'சூத்திரப் பசங்க அருகில் வீடு வேண்டாம் என்று! இன்னும் தீண்டாமையை விடாமல் பிடித்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள்? இதைப் பற்றி திருமாவோ ஸ்டாலினோ பேசினால் உடனே எரிச்சல் பற்றிக்கொண்டு வந்துவிடும்.
உங்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் பெரியார் மணியம்மை கல்யாணத்தை பற்றி பேசுவதுதான். இப்படி கல்யாணம் செய்த ஒரு இந்து கடவுளும் இல்லையா என்ன? ஏன் பார்ப்பனர்களில் இரண்டாவது மணம் செய்த கதையே இல்லையா என்ன? என் இஸ்லாமிய நண்பர்களையும் தலித் நண்பர்களையும் கொன்று குவித்த பாஜகவை ஆதரித்துவிட்டு நாங்கள் சாதுக்கள் என்று சொல்லுவது நியாயம்தானா? பெரியாரை படிக்கும் வரை எனக்கு பார்ப்பனர்கள் மீது பண்பற்ற கோபம் இருந்தது. எத்தனையோ ஆபாச சொற்களில் தீட்டு பார்ப்பவர்களை திட்டி இருக்கிறேன். ஆனால் பெரியார்தான் என்னை பண்படுத்தினார். என் பார்ப்பன உறவினர்களோ கலைஞர் எப்படி துயரத்தை அனுபவித்து சித்ரவதைப்பட்டு சாகவேண்டும் என்று சந்தியாவந்தனம் செய்து கொண்டு இருந்தார்கள். கொஞ்சம் உண்மை நிலையை கவனியுங்கள்! யாரால் இந்தத் தமிழகம் எல்லாவிதமான வசதிகளோடும் சமமாக வளமாக இருக்கிறது என்று தெரியும். இந்து என்ற காரணத்திற்காக பாஜகவிற்கு ஒட்டு போட்டீர்கள் என்றால் வரப்போகும் கொடுமை உங்கள் தலையிலும் வந்து விழும். ஜி.எஸ்.டி, பெட்ரோல் விலை ஏற்றம், விலைவாசி உயர்வு எல்லாம் நீங்கள் வெறுக்கும் 'சூத்திரர்'களுக்கு மட்டும் இல்லை உங்களுக்கும் சேர்த்துதான்! கொஞ்சம் சாதிப் பற்றை விட்டுவிட்டு சிந்தியுங்கள், நல்லவர்களுக்கு ஒட்டு போடுவீர்கள்! ராமர் கோயில் தேவையில்லை, சமூகநீதியைப் போதிக்கும் கல்வி நிலையங்கள்தான் தேவை .!!
பத்து சதவீதத்தை வைத்து ஏமாந்திர்கள் என்றால் அந்த ராமர் கூட உங்களை காப்பற்ற முடியாது ..

கருத்துகள் இல்லை: