விகடன் :
சுஹாய் அஜிஸ் தல்பூர் என்னும் பெண் ஏஎஸ்பி-யான இவர், தீவிரவாதிகளுடன்
துணிச்சலாக சண்டையிட்டு, சீனத் தூதரக அதிகாரிகளைக் காப்பாற்றியுள்ளார்.
சுஹாய் அஜிஸ் வழக்கம் போல பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள
சீனத் தூதரகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு
நுழைந்த தீவிரவாதிகள் 3 பேர், துப்பாக்கி, குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திடீரென தூதரகத்தின் மீது தாக்குதல்
நடத்தத் தொடங்கினர். பதிலுக்கு, சுஹாய் அஜிஸ் தலைமையில் இருந்த போலீஸும்
எதிர்த்தாக்குதல் நடத்தினர். இதில், தீவிரவாதிகள் 3 பேரும்
கொல்லப்பட்டனர். அதன்பிறகே சுஹாய் அஜிஸ் வைரலானார்.தீவிரவாதிகளைத் தைரியமாக எதிர்கொண்டு வெற்றிகண்ட அவரை பாகிஸ்தானியர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். அவர் பெண் என்பதற்காகவும், தீவிரவாதிகளை வீழ்த்தினார் என்பதற்காகவும் மட்டும் அவரை நெட்டிசன்கள் கொண்டாடவில்லை. அவர் வளர்ந்த விதமும், கடின உழைப்பால் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்றதாகவும் அவரைப் பாராட்டி வருகின்றனர். 2013-ம் ஆண்டு போலீஸ் பணியில் தன்னை இணைத்துக்கொண்ட இவர், தொடர்ந்து நேர்மையாகப் பணிபுரிந்து பாராட்டுகளைக் குவித்தவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக