tamil.oneindia.com -hemavandhana.: மதுரை கலைச்செல்வியை கொன்ற ஆட்டோ டிரைவர்கள் பரபர தகவல்கள்! சென்னை: மெரினா பீச் மணலில் பெண்ணின் சடலத்தை அரைகுறையாக புதைத்தாலும் புதைத்தார்கள்... தோண்ட தோண்ட விஷயங்கள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கின்றன.
மதுரையை சேர்ந்த கலைச்செல்விக்கு கணவன், 2 குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் நீண்ட காலமாகவே விபச்சாரம் செய்து வருகிறார். இதற்காக இவர் தேர்ந்தெடுத்த இடம்தான் மெரினா. சொந்த ஊரில் இந்த தொழிலை செய்தால் குடும்பத்திற்கு தெரிந்துவிடும் என்று, இதற்காகவே சென்னைக்கு வந்து போய் உள்ளார். அதிக நெருக்கம் எப்பவுமே சுற்றி திரியும் இடம் மெரினா பீச்தான். அடிக்கடி சென்னை போவதால், புருஷனிடம் சண்டை வந்து ஒரேடியாக சென்னைக்கே வந்துவிட்டார். இப்படி 2 மாதமாக சென்னையில்தான் தங்கி இருந்திருக்கிறார். ஆட்டோ டிரைவர் பிரேம்குமார், சூர்யா என்ற 2 பேர்களிடம்தான் கலைச்செல்விக்கு நெருங்கிய தொடர்பு அதிகமாக இருந்திருக்கிறது.
இதனிடையே இந்த தொழிலில் விபச்சாரம் செய்யும் மற்றொரு பெண்ணுக்கு கலைச்செல்வி மேல் தொழில் ரீதியான போட்டி, பொறாமை ஏற்பட, அதற்கு ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 2 பேரும் சப்போர்ட்டுக்கு போக, பிறகுதான் கலைச்செல்வியை கொலை செய்யும் வரை போய்விட்டது. இந்த விவகாரத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதாவது 2 ஆண்கள், 2 பெண்கள்!!
பிரேம்குமார், சூர்யா இந்த பெண்களின் பெயர்கள் சந்தியா, மற்றொருவர் பெயர் ஷீலாபிரியா. சந்தியாவுக்கு 19 வயதுதான் ஆகிறது. ஷீலா பிரியாவிக்கு 26 வயதாகிறது. இருவருமே விபச்சாரம் செய்யும் பெண்கள்தான். இந்த பெண்களிடமும் பிரேம்குமாருக்கும் சூர்யாவுக்கும் பக்கம் இருந்திருக்கிறது. கலைச்செல்வி பீச்சில் விபச்சாரம் செய்ய தொடங்கிய பிறகுதான் இந்த பெண்களுக்கு பிரச்சனையே ஆரம்பித்திருக்கிறது.
இருவருக்குமே கலைச்செல்வியால் தங்களது தொழில் பாதித்ததாகவும், இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மீது பரிதாபப்பட்ட பிரேம்குமாரும், சூர்யாவும் கலைச்செல்வியிடம் கொஞ்ச நாளாக பேசுவதை தவிர்த்து வந்தனர். ஆனாலும் கலைச்செல்வியின் விபச்சார வளர்ச்சியை கண்டு சந்தியா, ஷீலாபிரியாவால் பொறுத்து கொள்ளவே முடியவில்லை.
அதனால் தங்கள் விபச்சார தொழிலை காப்பாற்றி கொள்ள பிரேம்குமார், சூர்யாவை சந்தித்து முறையிட்டனர். பிறகு எப்படியாவது கலைச்செல்வியை கொலை செய்துவிடுமாறும் தெரிவித்துள்ளனர். இந்த 2 பெண்கள் கொடுத்த ஐடியாபடிதான், கொஞ்ச நாளாக தொடர்பே இல்லாமல் போனாலும் வம்படியாக போனை போட்டு வரவழைத்து, ஒன்றாக தண்ணியடித்து, ஜாலியாகவும் இருந்துவிட்டு பிறகு கொலையும் செய்துள்ளனர்.
அது மட்டும் இல்லை.. இந்த கொலை நடந்த சமயத்தில் சந்தியாவும், ஷீலாபிரியாவும் சம்பவ இடத்தில்தான் இருந்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களை போலீசார் வழக்கில் சேர்த்து அதிரடியாக கைது செய்தது. இப்போது 2 பெண்களிடமும் விசாரணை தனித்தனியாக போலீசார் நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக