சனி, 15 செப்டம்பர், 2018

தி.மு.க., - ம.தி.மு.க., முப்பெரும் விழா ஸ்டாலின், வைகோ முக்கிய அறிவிப்பு?

D.M.K,DMK,MDMK,Vaiko,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்,ம.தி.மு.க,வைகோதினமலர் :விழுப்புரத்தில் இன்று நடக்கவுள்ள, தி.மு.க., முப்பெரும் விழாவில், ஸ்டாலி னும்; ஈரோட்டில் நடக்கஉள்ள மாநாட்டில், ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோவும், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, முக்கிய அறிவிப்பை வெளியிடுவர் என்ற எதிர்பார்ப்பு, இரு கட்சி வட்டாரங்களிலும் எழுந்துள்ளது.
ம.தி.மு.க., சார்பில், ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை பிறந்த நாள் விழா, ம.தி.மு.க., வெள்ளி விழா, வைகோவின் பொது வாழ்வு பொன் விழா என, முப்பெரும் விழா மாநாடு, இன்று காலை, 9:00 மணிக்கு, ஈரோட்டில் துவங்குகிறது. அழைப்பு மதியம், 12:00 மணிக்கு, மறைந்த கருணாநிதியின் படத்தை, தி.மு.க., பொருளாளர், துரைமுருகன் திறந்து வைத்து பேசுகிறார். பொது வாழ்வு பொன் விழா மலரை, தேசிய மாநாட்டு கட்சி தலைவர், பரூக் அப்துல்லா
வெளியிடுகிறார். மாலை, 5:00 மணிக்கு, தேசியவாத காங்கிரஸ் தலைவர், சரத் பவார், முன்னாள் மத்திய அமைச்சர், யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் பேசுகின்றனர்.


இந்த விழாவில், ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என, வைகோ அழைப்பு விடுத்திருந்தார். அந்த நேரத்தில், தி.மு.க., செயல் தலைவராக, ஸ்டாலின் இருந்தார். கருணாநிதி மரணம் அடைந்ததும், தலைவர் பதவியை ஏற்றார்.

'தலைவர் பதவி ஏற்ற பின், பங்கேற்க கூடிய முதல் விழா, தி.மு.க., விழாவாக இருக்க வேண்டும்' என, முன்னாள் அமைச்சர்கள் சிலர், ஸ்டாலினிடம் வலியுறுத்தினர். எனவே, தனக்கு பதிலாக, பொருளாளர், துரைமுருகனை, ம.தி.மு.க., மாநாட்டிற்கு, ஸ்டாலின் அனுப்பி வைத்து உள்ளார். அதேநேரத்தில், விழுப்புரத்தில் இன்று, தி.மு.க., முப்பெரும் விழா நடக்கிறது. ஸ்டாலின் தலைவரான பின், முதன் முறையாக பேசும் விழாவாக, அது அமைந்துள்ளது.

அதிருப்தி :

இது குறித்து, ம.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: ம.தி.மு.க., மாநாட்டில் பங்கேற்க, முதலில் சம்மதம் தெரிவித்த ஸ்டாலின், பின், பங்கேற்காமல் தவிர்த்ததை, ம.தி.மு.க., தலைவர் உள்ளார். தி.மு.க.,வை பொறுத்தவரையில், அண்ணாதுரை பிறந்த நாளன்று, முப்பெரும் விழா கொண்டாடாமல், வரும், 16, 17ம் தேதிகளில் கொண்டாடி இருக்கலாம்.

எதிர்பார்ப்பு :

ஆனால், ம.தி.மு.க., மாநாட்டை தவிர்ப்பதற்காகவே, விழுப்புரத்தில் இன்று, தி.மு.க., முப்பெரும் விழா நடத்தப்படுகிறது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக, தி.மு.க., - ம.தி.மு.க., நடத்திய, திரைமறைவு பேச்சிலும், இரு கட்சிகள் இடையே, உரசல் உள்ளது. எனவே, லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, விழுப்புரத்தில் ஸ்டாலினும், ஈரோட்டில் வைகோவும், முக்கிய அறிவிப்பை வெளியிடுவர் என்ற, எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. இவ்வாறு, ம.தி.மு.க., வட்டாரங்கள் கூறின.

கருத்துகள் இல்லை: