தினமலர் :புதுடில்லி: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே,
டில்லி வந்துள்ளார். நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில்,
இன்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்
சிங்கை, தனது மகன் நமலுடன் சென்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா உடனிருந்தார். ஆச்சர்யம் முன்னதாக டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், நாங்கள் இனரீதியிலான போரை நடத்தவில்லை. ராணுவ நடவடிக்கைகள், தமிழ் மக்களுக்கு எதிராக எடுக்கப்படவில்லை. பயங்கரவாத அமைப்பு, இலங்கையில் மட்டும் பரவியிருக்கவில்லை. அது தான் முன்னாள் பிரதமர் ராஜிவை கொன்றது. 2009 ல் இலங்கையில் பயங்கரவாதம் முற்றிலும் வீழ்த்தப்பட்டது அனைத்து நாடுகளையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது. பல நாடுகள், ஏராளமான பணம் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் வைத்திருந்தும் பயங்கரவாதிகளை ஒழிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக