tamilthehindu : தமிழகத்தில் சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகளின் உச்சக்கட்டமாக சென்னை புழல் சிறையில் கைதிகளின் அறையை ஓட்டல் அறைபோல் மாற்றி சொகுசாக வைத்துள்ள புகைப்படங்கள் வெளியானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம், கஞ்சா புழக்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பணம் கொடுத்தால் கிடைக்கும் என்பது ஊரறிந்த விஷயமாகி போனது. அதிகாரிகளே இவற்றை சிறைக்குள் கடத்திச் சென்று கொடுப்பது வாடிக்கையான விஷயமாக மாறிப்போனது. இதில் சில அதிகாரிகள் அவ்வப்போது சிக்கி நடவடிக்கைக்கு உள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
பரோலில் வர, மற்ற சலுகைகள் பெற ஐயாயிரம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டி
உள்ளதாக வந்த புகாரை அடுத்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து
வழக்குப்பதிவு செய்து சிறைத்துறை கூடுதல் டிஜிபியிடம் விளக்கம்
கேட்டுள்ளதும் சமீபத்தில் நடந்தது.
சிறைக்குள் கஞ்சாவை கடத்திச் சென்று கொடுப்பதற்கும், செல்போன்களை கைதிகளிடம் கொண்டு சேர்ப்பதற்கும், சிம் கார்டுகள், சார்ஜர்கள் கொடுப்பதற்கு தனித்தனியாக பணம் வசூலிக்கப்படுவதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகும்.
எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு தொகை என பட்டியல் போட்டு கறாராக வசூலிக்கும் லிஸ்ட்டும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
புழல் சிறையிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைதிகளிடம் இருந்து
ஆன்ட்ராய்டு செல்போன்கள், கஞ்சா, புதிய உடைகள், விலை உயர்ந்த ஷூக்கள்
உள்ளிட்ட பல பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சமீபத்தில் சென்னை புழல் சிறைக் கைதிகளிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்களில் எடுக்கப்பட்ட படங்களை சிறையில் உள்ள சில நேர்மையான காவலர்கள் வெளியில் கசிய விட்டுள்ளனர். இவைகள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதில் உள்ள புகைப்படங்கள் சிறைத்துறைக்குள் உள்ள முறைகேடுகளை படம்போட்டு காட்டுகிறது. சிறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உள்ள கைதிகள் வெளியில்கூட அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ மாட்டார்கள் அவ்வளவு சொகுசாக வாழ்வது தெரிகிறது.
பொதுவாக சிறையின் அறையில் சாதாரண சிமெண்ட் திண்டு படுக்க இருக்கும், அலுமினிய தட்டு, போர்வை, அறைக்குள்ளேயே கழிவறை என்றுதான் பார்த்திருப்போம். ஆனால் தற்போது வெளியான காட்சி அனைத்து எண்ணங்களையும் தவிடு பொடியாக்கி உள்ளது.
காசு கொடுத்தால் சிறையில் எதையும் பெறலாம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தில் கைதிகள் ஜொலிக்கும் உடையில் பளபளவென்று உள்ளனர். அறையில் விரும்பிய வண்ணத்தை அடித்து ஓவியம் தீட்டி, திரைச்சீலைகள் போட்டு, கட்டில், மெத்தை, டிவி, செல்போன், வண்ண வண்ண உடைகள், நாற்காலிகள், விலை உயர்ந்த ஷூக்கள், ஆன்ட்ராய்டு போன் வசதிகளுடன் இருப்பது தெரிகிறது.
அறைகளை பார்த்தால் அவை சிறை அறை என சத்தியம் செய்தாலும் யாரும்
ஒப்புக்கொள்ள மாட்டார்கள், ஆனால் படம் வெளியானதும் அதிர்ச்சியடைந்த
சிறைத்துறை ஏடிஜிபி அஷுதோஷ் சுக்லா நேரில் சென்று திடீர் ஆய்வு
மேற்கொண்டார்.
அப்போது அவர் மேற்கண்ட புகைப்படங்கள் உண்மை என ஒப்புக்கொள்ளும் வகையில் அவைகள் கடந்த மாதம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் சிறையில் அதிகாரிகளின் துணையுடன் கைதிகள் கேட்டதெல்லாம் பெற்று சிறைக்குள்ளேயே சொகுசு வாழ்க்கை வாழ்வது உறுதியாகி உள்ளது.
சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில், நடைபாதையில், செடிகளுக்கு நடுவே, அறைக்குள் என அனைத்து இடங்களிலும் நல்ல உடைகள், ஷூக்கள், கூலிங்கிளாஸ் அணிந்து செல்பி எடுத்தும், குரூப் போட்டோ எடுத்தும் உற்சாகமாக போஸ் கொடுத்துள்ளனர்.
இது தவிர வெளியிலிருந்து பிரியாணி, கறிக்குழம்பு உள்ளிட்ட வகை வகையான சாப்பாடும் உள்ளது போன்ற காட்சிகளும் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு அறையிலும் தொலைக்காட்சி, கடிகாரம் அனைத்தும் உள்ளது.
நெட் வசதியுடன் உள்ள செல்போன்கள் மூலம் வெளிநாடுகளுக்கு தொடர்பு கொள்ளவும், சிறையிலிருந்தே திட்டம் போட்டு கொலை, கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றவும், தங்கள் கூட்டாளிகளுடன் பேசுவது திட்டத்தை அரங்கேற்றுவது அனைத்தும் சாதாரணமாக நடக்கிறது.,
இவ்வாறு சிறைக்கைதிகளுக்கு உதவும் வரை உயர் அதிகாரிகள் என்ன செய்தார்கள், சிறைக்குள் ஒரு சூப்பிரண்ட் எப்போதும் பணியில் இருப்பார் அவர் காலை மாலை சிறைக்குள் ரவுண்ட்ஸ் போவார் என்று கூறப்படுகிறது. சிறைக்குள் கிடைத்த புகைப்பட காட்சிகள் வெளியானதை அடுத்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி அஷுதோஷ் சுக்லா சிறைக்குள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின் கூடுதல் டிஜிபி அஷுதோஷ் சுக்லா, இது ஒன்றரை மாதத்துக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம், பண்டிகை நேரத்தில் இதுபோன்ற சிறப்பு அனுமதி பெறுவது உண்டு. ஆனால் செல்போன் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளோம். ஏ வகுப்பு சிறைக்கைதிகளுக்கு சற்று வசதி செய்துக் கொடுப்பது உண்டு. இனி நானே நேரடியாக வாரவாரம் ஆய்வு நடத்த உள்ளேன். பிளாக் டு பிளாக் ஆய்வு நடத்த உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்
சிறைக்குள் கஞ்சாவை கடத்திச் சென்று கொடுப்பதற்கும், செல்போன்களை கைதிகளிடம் கொண்டு சேர்ப்பதற்கும், சிம் கார்டுகள், சார்ஜர்கள் கொடுப்பதற்கு தனித்தனியாக பணம் வசூலிக்கப்படுவதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகும்.
எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு தொகை என பட்டியல் போட்டு கறாராக வசூலிக்கும் லிஸ்ட்டும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் சென்னை புழல் சிறைக் கைதிகளிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்களில் எடுக்கப்பட்ட படங்களை சிறையில் உள்ள சில நேர்மையான காவலர்கள் வெளியில் கசிய விட்டுள்ளனர். இவைகள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதில் உள்ள புகைப்படங்கள் சிறைத்துறைக்குள் உள்ள முறைகேடுகளை படம்போட்டு காட்டுகிறது. சிறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உள்ள கைதிகள் வெளியில்கூட அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ மாட்டார்கள் அவ்வளவு சொகுசாக வாழ்வது தெரிகிறது.
பொதுவாக சிறையின் அறையில் சாதாரண சிமெண்ட் திண்டு படுக்க இருக்கும், அலுமினிய தட்டு, போர்வை, அறைக்குள்ளேயே கழிவறை என்றுதான் பார்த்திருப்போம். ஆனால் தற்போது வெளியான காட்சி அனைத்து எண்ணங்களையும் தவிடு பொடியாக்கி உள்ளது.
காசு கொடுத்தால் சிறையில் எதையும் பெறலாம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தில் கைதிகள் ஜொலிக்கும் உடையில் பளபளவென்று உள்ளனர். அறையில் விரும்பிய வண்ணத்தை அடித்து ஓவியம் தீட்டி, திரைச்சீலைகள் போட்டு, கட்டில், மெத்தை, டிவி, செல்போன், வண்ண வண்ண உடைகள், நாற்காலிகள், விலை உயர்ந்த ஷூக்கள், ஆன்ட்ராய்டு போன் வசதிகளுடன் இருப்பது தெரிகிறது.
அப்போது அவர் மேற்கண்ட புகைப்படங்கள் உண்மை என ஒப்புக்கொள்ளும் வகையில் அவைகள் கடந்த மாதம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் சிறையில் அதிகாரிகளின் துணையுடன் கைதிகள் கேட்டதெல்லாம் பெற்று சிறைக்குள்ளேயே சொகுசு வாழ்க்கை வாழ்வது உறுதியாகி உள்ளது.
சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில், நடைபாதையில், செடிகளுக்கு நடுவே, அறைக்குள் என அனைத்து இடங்களிலும் நல்ல உடைகள், ஷூக்கள், கூலிங்கிளாஸ் அணிந்து செல்பி எடுத்தும், குரூப் போட்டோ எடுத்தும் உற்சாகமாக போஸ் கொடுத்துள்ளனர்.
இது தவிர வெளியிலிருந்து பிரியாணி, கறிக்குழம்பு உள்ளிட்ட வகை வகையான சாப்பாடும் உள்ளது போன்ற காட்சிகளும் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு அறையிலும் தொலைக்காட்சி, கடிகாரம் அனைத்தும் உள்ளது.
நெட் வசதியுடன் உள்ள செல்போன்கள் மூலம் வெளிநாடுகளுக்கு தொடர்பு கொள்ளவும், சிறையிலிருந்தே திட்டம் போட்டு கொலை, கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றவும், தங்கள் கூட்டாளிகளுடன் பேசுவது திட்டத்தை அரங்கேற்றுவது அனைத்தும் சாதாரணமாக நடக்கிறது.,
இவ்வாறு சிறைக்கைதிகளுக்கு உதவும் வரை உயர் அதிகாரிகள் என்ன செய்தார்கள், சிறைக்குள் ஒரு சூப்பிரண்ட் எப்போதும் பணியில் இருப்பார் அவர் காலை மாலை சிறைக்குள் ரவுண்ட்ஸ் போவார் என்று கூறப்படுகிறது. சிறைக்குள் கிடைத்த புகைப்பட காட்சிகள் வெளியானதை அடுத்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி அஷுதோஷ் சுக்லா சிறைக்குள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின் கூடுதல் டிஜிபி அஷுதோஷ் சுக்லா, இது ஒன்றரை மாதத்துக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம், பண்டிகை நேரத்தில் இதுபோன்ற சிறப்பு அனுமதி பெறுவது உண்டு. ஆனால் செல்போன் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளோம். ஏ வகுப்பு சிறைக்கைதிகளுக்கு சற்று வசதி செய்துக் கொடுப்பது உண்டு. இனி நானே நேரடியாக வாரவாரம் ஆய்வு நடத்த உள்ளேன். பிளாக் டு பிளாக் ஆய்வு நடத்த உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக