வியாழன், 13 செப்டம்பர், 2018

இலங்கை கோயிலில் விலங்குகளை பலியிட தடை: அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்


tamilthehindu :இலங்கையில் இந்து கோயில்களில் விலங்குகளை பலியிடும் வழக் கத்தை தடை செய்வதற்கு அந் நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இலங்கையில் இந்து மற்றும் முஸ்லிம் மத விழாக்களின்போது ஆடு, கோழி போன்ற விலங்கு களை பலியிடுவதற்கு அந்நாட்டு விலங்குகள் உரிமை செயற்பாட்டா ளர்களும், புத்தமத அமைப்புகளும் தொடர்ந்து பல ஆண்டுகளாக எதிர்த்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இலங்கை நாடாளுமன்றத்தில் நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத் தில் அந்நாட்டு இந்து சமய விவகாரத் துறை அமைச்சர் டி.எம்.சுவாமி நாதன், இலங்கையில் உள்ள இந்து கோயில்களில் விலங்குகளை பலியிடும் வழக்கத்துக்கு தடை விதிக்க பரிந்துரை செய்தார்.
பெரும்பான்மை ஆதரவு
இதற்கு இந்து மதத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் உட்பட இலங்கையின் பெரும்பான்மையான நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஆதரவளித் தனர். இதையடுத்து கோயில்களில் விலங்குகளை பலியிடுவதற்கு தடை விதிக்க அமைச்சரவை ஒப்பு தல் வழங்கியது.

கோயில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு
இந்நிலையில், தங்களின் வழி பாட்டு உரிமையில் அரசு தலையிடு வதாகக் கூறி, இந்த தடை நடவடிக் கைக்கு கோயில்களின் நிர்வாகத் தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றனர். பல நூற்றாண்டு காலமாக கோயில்களில் உள்ள விலங்கு களை பலியிடும் வழக்கத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசின் இந்நடவடிக்கைக்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்ற னர். குறிப்பாக அசைவ உணவு சாப்பிடும் பழக்கம் உள்ளோர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளனர்

கருத்துகள் இல்லை: