dinamalar.com;
ஐதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்,தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. தெலுங்கானா
மாநில அமைச்சரவை பரிந்துரையை ஏற்று, கடந்த 6-ம் தேதி அம்மாநில சட்டசபை
கலைக்கப்பட்டது. . மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும்
மிசோரம் மாநிலங்களில் இந்தாண்டுஇறுதியில் தேர்தல் நடக்க உள்ளது, அப்போது
தெலுங்கானா மாநிலத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது. அங்குள்ள நிலையை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம்
குழுவை அமைத்துள்ளது. தற்போது காபந்து முதல்வராக சந்திரசேகரராவ்
உள்ளார்.இந்நிலையில் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் காங்.
மற்றும் இந்திய கம்யூ. என புதிய கூட்டணியை அமைத்துள்ளது. இந்த மூன்று
கட்சியைச்சேர்ந்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.அப்போது தெலுங்கானா சட்டசபையை
கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என
வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக