தினத்தந்தி :சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை, ரூ.10 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்த மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்தன.
இந்த திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தும் ஆரம்பக்கட்ட நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டபோது, கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 8 வழிச்சாலை திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறது.
இந்த் நிலையில் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னைஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
8 வழிச்சாலை திட்டத்தை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் திட்டத்தை இறுதி செய்யும்வரை நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது எனவும் மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இதையடுத்து, 8 வழிச்சாலை திட்டத்திற்காக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில், வனத்துறை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை ஐகோர்ட் தடை விதித்து உள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக