ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

உச்ச நீதிமன்றமே எங்களுடையதுதான்.. பாஜக அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்

Swathi K : இவங்க பேசுறது எல்லாம் சேர்த்து வைச்சு தேர்தல் நேரத்தில்
வெளியிட வேண்டும்..
கேட்டுக்கோங்க மக்களே... நம்ம ரொம்ப நாளா சொல்றது தான்... உச்ச நீதி மன்றம் பிஜேபியின் கையில் தான் என்ற உண்மையை பிஜேபி அமைச்சரே நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.. உண்மையை சொன்னதற்கு நன்றி..
‘உச்ச நீதிமன்றமே எங்களுடையதுதான்; அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம்’: பாஜக அமைச்சர் பேச்சால் சர்ச்சை.
அயோத்தியில் ராமர் கோயில் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இன்னும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்காததால், ராமர் கோயில் நிலம் தொடர்பாக எந்த அரசியல் தலைவர்களும் கருத்துத் தெரிவிப்பது இல்லை.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் முக்த் பிஹாரி வர்மா ராமர் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
பஹாரெய்ச் நகரில் அமைச்சர் முக்த் பிஹாரி வர்மா நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அயோத்தியில் அனைத்துப் பிரச்சினைகளையும் நாங்கள் தீர்த்து, விரைவில் அங்கு ராமர் கோயிலைக் கட்டுவோம். உச்ச நீதிமன்றமே எங்களுடையதுதான், ஆதலால், அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடுவோம். நீதிமன்றம், இந்த நாடு, ராமர் கோயில் அனைத்தும் எங்களுடையதுதான் என்று அவர் கூறினார்.
Reference:
https://www.indiatoday.in/…/ram-temple-will-be-built-suprem…
https://tamil.thehindu.com/india/article24907338.ece…

கருத்துகள் இல்லை: