புதன், 12 செப்டம்பர், 2018

முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் மோடி சந்திப்பு .. சு.சாமியின் ஏற்பாடு ,,, நாமல் ராஜபக்ஷாவும்

மாலைமலர் :இந்தியா வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே
இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
 புதுடெல்லி: பா.ஜ.க. தலைவர் சுப்ரமணிய சாமி கடந்த 2015-ம் ஆண்டு ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, இந்துத்வா தத்துவத்தை விட்டு விலகாமல் இருக்க இந்து இளைஞர்களை ஒன்றிணைப்பது, பசுவதை தடுப்பு மற்றும் பா.ஜ.க. அரசுக்கு சில விவகாரங்களில் அழுத்தம் அளிப்பது உள்ளிட்டவை இந்த அமைப்பின் நோக்கம் என்று விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் அறிமுக விழாவின்போது சுப்ரமணிய சாமி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இந்த அமைப்பின் சார்பில் டெல்லியில் இன்று பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு சுப்ரமணிய சாமி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று கடந்த திங்கட்கிழமை இரவு ராஜபக்சே டெல்லி வந்தார். அவரை விமான நிலையத்தில் சுப்பிரமணிய சாமி வரவேற்றார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை ராஜபக்சே இன்று சந்தித்துப் பேசினார். டெல்லியில் மேலும் சில தலைவர்களை ராஜபக்சே சந்தித்து பேசுவார் என தெரியவந்துள்ளது

கருத்துகள் இல்லை: