dinamalar.com :
இஸ்ரோ
விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் , வெளிநாட்டிற்கு உளவு பார்த்ததாக
1994 ல் குற்றம்சாட்டப்பட்டது. ராக்கெட், செயற்கைகாள் தொழில்நுட்பம்
தொடர்பான தகவல்களை உளவுபார்த்து, மாலத்தீவை சேர்ந்த 2 பேருக்கு வழங்கியதாக
அவர், கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்த போது, கடும்
சித்ரவதைகளுக்கு ஆளானதாக புகார் கூறியிருந்தார்.
கேரள போலீசாரிடம் இருந்த இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில் நம்பி நாராயணன் மீதான குற்றச்சாட்டு பொய் என கண்டறியப்பட்டு, 1996 ல் வழக்கு முடிவுக்குவந்தது. சுப்ரீம் கோர்ட் அவரை குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்தது.

மேல்முறையீடு
இந்நிலையில்
தன் மீது பொய் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து தன்னை சிக்கிவைத்த
போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம்பி நாராயணன் சுப்ரீம்
கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த கோர்ட், நம்பி நாராயணனுக்கு
50 லடச ரூபாய் இப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதுடன், சம்பந்தபட்ட போலீசார்
மீது நடவடிக்கை எடுக்கவும் அனுமதி வழங்கியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக