மாலைமலர் :சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வருமானத்தை மதிப்பீடு செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வருமானத்தை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகளை தொடரலாம் என வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
சினிமா பைனான்சியர் அன்புச் செழியனுக்கு சொந்தமாக சென்னை மற்றும் மதுரையில் உள்ள வீடு, அலுவலகங்களில் 2015ம் ஆண்டு செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், 67 லட்சம் ரூபாய் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆவணங்களின் மூலம், 2010 - 11 முதல் 2015 - 16ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 375 கோடி ரூபாய் பண பரிவர்த்தனையை, 175 கோடி எனக் குறைத்து காட்டியுள்ளார். இந்த கூடுதல் வருமானத்திற்கான வரியை செலுத்தி விடுவதாகக் கூறி, அன்புச் செழியன் தரப்பில் வருமான வரித்துறை தீர்வு ஆணையத்தில் அளிக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது.
அவரது மேல் முறையீட்டு மனுவையும் நிராகரித்து கடந்த ஜனவரி 5ம் தேதி நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து அன்புச்செழியன் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அன்புச்செழியன், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மணிக்குமார், நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு, அன்புச்செழியனின் வருமானம் குறித்த மதிப்பீட்டை மேற்கொள்ள வருமான வரித்துறை உதவி ஆணையருக்கு அனுமதியளித்தது. அதேசமயம், அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் இறுதி உத்தரவு ஏதும் பிறப்பிக்க கூடாது எனவும் உத்தரவிட்டது. - ஜீவாபாரதி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக