வேலூரில் உள்ள சத்துவாச்சேரி பொன்னியம்மன்
கோவிலில் இருந்த 2 தேர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோவில் வளாகத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்தன. இந்தத் தீவிபத்தில் அங்கிருந்த பசுபதீஸ்வரர் சந்நிதி மேற்கூரை இடிந்து விழுந்தது.
தொடர்ந்து, சிவபெருமானின் பஞ்ச சபைகளில் ஒன்றான திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில், தல மரம் தீப்பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவங்களால் பக்தர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், நேற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின் கசிவு ஏற்பட்டு, மின்சாதன அறையில் தீவிபத்து ஏற்பட்டது.
இதனிடையே வியாழக்கிழமை நேற்று நள்ளிரவு, வேலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சத்துவாச்சாரி மாரியம்மன், பொன்னியம்மன் கோவிலில் நின்று கொண்டிருந்த 2 தேர்கள் திடீர் என்று தீப்பிடித்து எரிந்தன. இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத்தகைய தீப்பிடிப்பு சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், இவை தொடர் சதி வேலையா என்று கேள்வி எழுப்புகின்றனர். தினசரி .com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக