ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

பெரியார் ... காலத்துக்கு ஏற்ப பார்பனர்களும் இதர சாதியினரும் தங்களை மாற்றி கொள்ளவேண்டும்


பிராமணர்கள் இங்கு வாழக்கூடாது அர்த்தம் ஆகாது
என்று சொன்னதாகவோ...இந்த நாட்டை விட்டு அவர்கள் போய்விட வேண்டும் என்று சொன்னதாகவோ...
அவர்களை போகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அது ஆகிற காரியம் என்று நான் கருதவும் இல்லை.தவிர பிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றுமில்லை.
அவர்கள் அனுசரிக்கிற சில பழக்க வழக்கங்களையும் முறைகளையும்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.இது அவர்கள் மனது வைத்தால் மாற்றிக் கொள்வது பிரமாதமான காரியமில்லை.
நமக்கும் அவர்களுக்கும் என்ன பேதம்?
இப்போது அவர்களும் நாமும் ஒரே குழாயிலே தண்ணீர் பிடிக்கிறோம்.ஒரே தெருவில் நடக்கிறோம்.ஒரு தொழிலையே இருவரும் செய்கிறோம்.காலமும் பெருத்த மாறுதல் அடைந்து விட்டது.மக்களும் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து விட்டார்கள்.விஞ்ஞான பெருக்கம் அடைந்து விட்டது.இந்த நிலைமையில் நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப்பானேன்?
ஆகவே உள்ள பேதங்கள் மாறி,நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும் சகோதர உரிமையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் பாடு படுகிறேன்.நம்மிடையில் பேத உணர்ச்சி வளரக் கூடாது என்பதில் எனக்கு கவலை உண்டு.

எனவே முயற்சியில் பலாத்காரம் சிறிதும் இருக்கக் கூடாது என்பதிலும் எனக்கு கவலை உண்டு.காலம் எப்போதும் ஒன்று போல் இருக்க முடியாது.
நம்மில் இருதரப்பிலும் பல அறிஞர்களும் பொறுமைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடமில்லாமல் இருந்து வருகிறது.இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது.திராவிட கழக பின் சந்ததிகளும் பிராமணர்களின் பின் சந்ததிகளும் இந்தப் படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூறமுடியாது.ஆதலால் அதிருப்திகளுக்கு காரணமானவைகளை மாற்றிக் கொள்வது இருவருக்கும் நலம்.
அதை நண்பர் ஶ்ரீனிவாச ராகவன் அவர்களுக்கும் நன்றாய் விளக்கி இருக்கிறார்;அதாவது பிராமணர்களும் கால தேச வர்த்தமானத்துக்கு தக்கபடி தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்.அதுதான் இப்போது இருதரப்பினரும் கவனிக்க வேண்டியது.
தந்தை பெரியார் சொற்பொழிவு(5.1.53 )

கருத்துகள் இல்லை: