திங்கள், 5 பிப்ரவரி, 2018

1967 திமுக பாணியில் கர்நாடகத்தில் சித்தராமையா அதிரடி ...எங்கும் எதிலும் கன்னடம் ... பாஜக பணால் ...

தமிழகத்தில் காங். ஆட்சியை ஃபினிஷ் செய்த திமுக பாணியில் சித்தராமையா அதிரடி.. கர்நாடக பாஜக திண்டாட்டம் தமிழகத்தில் காங். ஆட்சியை ஃபினிஷ் செய்த திமுக பாணியில் சித்தராமையா அதிரடி.. கர்நாடக பாஜக திண்டாட்டம் 
Veera Kumar - Oneindia Tamil பாஜகவின் செல்வாக்கை செல்லாக்காசாக்க சித்தராமையா முழு வீச்சு- வீடியோ சென்னை: தமிழகத்தில் திமுகவின் மாநில முன்னுரிமை, தமிழ் மொழி முன்னுரிமை கொள்கைகளில் சிக்கி, காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததை போல இப்போது, பாஜகவின் செல்வாக்கை செல்லாக்காசாக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா முழு வீச்சில் முயற்சி மேற்கொண்டு வருகிறார். கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 1985ம் ஆண்டு ராமகிருஷ்ண ஹெக்டே ஆட்சி காலத்திற்கு பிறகு கர்நாடகாவில், தொடர்ந்து மீண்டும் அதே முதல்வர் தலைமையிலான அரசை மக்கள் தேர்ந்தெடுத்தது கிடையாது. ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டையே ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் எடுத்துள்ளனர்.
அதை இந்த முறை மாற்றிக்காட்ட வேண்டும் என்பதில் கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வரான சித்தராமையா தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் தமிழகத்தில் திமுக ஆரம்ப காலகட்டங்களில் எடுத்ததை போன்ற மாநிலம், மொழி சார்ந்த விஷயங்களை முன்னிறுத்தி பாஜகவை பந்தாட தொடங்கிவிட்டார். 
மேலும், பாஜக பிற மாநிலங்களில் என்ன மாதிரி பிரச்சாரங்களை முன்னெடுத்து காங்கிரசை வீழ்த்தியதோ, அதேபோன்ற பிரச்சாரங்களை கர்நாடகாவில் பாஜகவுக்கு எதிராக சித்தராமையா முன்னெடுத்துள்ளார். ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு தேசிய கட்சியான காங்கிரசின் முதல்வராக இருந்தபோதும், பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஹிந்தியில் எழுதப்பட்ட தகவல் அறிவிப்புகளை தார் பூசி அழித்த கன்னட அமைப்பினர் போராட்டங்களுக்கு சித்தராமையா ஆதரவு அளித்தார். ஹிந்தியை அழித்தெடுத்தார். 
தமிழகத்தில் எப்போதோ ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. அரசியல் கட்சி என்ற வகையில் அதில் திமுக முன்னிலையில் இருந்தது. 
ஆனால் கர்நாடகாவில் ஹிந்தி என்பது சகஜமாக ஏற்கப்பட்ட மொழி. பாஜகவுக்கு செக் பாஜகவுக்கு செக் தமிழ் போன்ற மொழிகளில் எழுதப்பட்டிருந்தால்தான் போராட்டம் நடத்த கன்னட அமைப்பினர் பழக்கி வைக்கப்பட்டிருந்தனர். 
தமிழையே பெரும் எதிர்ப்புக்குரிய மொழியாக அவர்கள் பார்த்தனர். ஆனால் பாஜக ஹிந்தியின் மூலம், இந்தியாவின் ஒருமைப்பாட்டை காப்பாற்ற முடியும் என நினைக்கிறது. இதையறிந்து ஹிந்தி என்பது கன்னடத்திற்கு எதிரானது என பிரச்சாரங்களுக்கு ஊக்கம் கொடுத்து பாஜகவுக்கு செக் வைத்துவிட்டார் சித்தராமையா

கருத்துகள் இல்லை: