Siva
- Oneindia Tamil
மாலே: மாலத்தீவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சயீது மற்றும்
முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயூம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மாலத்தீவில் உள்ள உச்ச
நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் உச்ச
நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க மறுத்துவிட்டார். மேலும் அவர் 15 நாட்களுக்கு
அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தை ராணுவம்
முற்றுகையிட்டுள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சயீது, நீதிபதி அலி
ஹமீது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயூமும் கைது செய்யப்பட்டுள்ளார். 80 வயதாகும் கயூம் மாலேவில் உள்ள அவரது வீட்டில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் முன்பு வீடியோ மெசேஜ் ஒன்றை கயூம் ட்விட்டரில் வெளியிட்டதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 30 ஆண்டுகளாக மாலத்தீவின் அதிபராக இருந்த கயூம் யாமீனிக்கு எதிராக செயல்பட்டு வந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக