சனி, 10 பிப்ரவரி, 2018

எருமை இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் ....

எருமை இறைச்சி: ஏற்றம் கண்ட ஏற்றுமதி!மின்னம்பலம் :2017ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் எருமை இறைச்சி ஏற்றுமதி 7 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
உலகின் மிகப் பெரிய எருமை இறைச்சி ஏற்றுமதியாளராகத் திகழும் இந்தியா, மேற்கூறிய காலகட்டத்தில் மொத்தம் 1.07 டன் அளவிலான எருமை இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. வியட்நாம், மலேசியா போன்ற நாடுகளில் எருமை இறைச்சிக்கான தேவை அதிகமாக இருந்ததால் இந்தியாவின் ஏற்றுமதி கணிசமான ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. பாஸ்மதி அரிசி தவிர்த்து, எருமை இறைச்சி உட்பட இதர வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஏற்றுமதியைப் பொறுத்தவரையில், 2017 ஏப்ரல் - டிசம்பரில் 39.5 சதவிகித உயர்வுடன் மொத்தம் 6.34 மில்லியன் டன் அளவிலான வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்திய பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்ய ஈரான் தயாராகியுள்ளதால் இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மதிப்பு அடிப்படையில் மொத்த வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஏற்றுமதியில் பாஸ்மதி அரிசியின் பங்கு மட்டும் 22 சதவிகிதமாக இருக்கிறது. இந்நிலையில் ஈரானுக்கு பாஸ்மதி அரிசி ஏற்றுமதி தொடங்கியுள்ளதால் கடந்த ஆண்டை விட இந்தியாவின் அரிசி ஏற்றுமதி இந்த ஆண்டில் பெருமளவில் உயரும் என வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: