திங்கள், 23 அக்டோபர், 2017

லட்சங்களில் விற்கப்படும் '2.0' இசை விழா டிக்கெட்!

6 பேர் கொண்ட இருக்கைக்கு 20,900 AED (இந்திய மதிப்பில் ரூ.3,71,625), 8 பேர் கொண்ட இருக்கைக்கு 26,500 AED (ரூ.4,69,179), 12 பேர் கொண்ட இருக்கைக்கு 38,500 AED (ரூ.6,81,637) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
லட்சங்களில் விற்கப்படும் '2.0'  இசை விழா டிக்கெட்!
மின்னம்பலம் :துபாயில் நடைபெறும் ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘2.O’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாய், டௌன்டவுன் பகுதியில் உள்ள புர்ஜ் பார்க்கில் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடி இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். அத்துடன், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.


இந்த விழாவில் கலந்துகொள்ள விஜபி கட்டணம், 6 பேர் கொண்ட இருக்கைக்கு 20,900 AED (இந்திய மதிப்பில் ரூ.3,71,625), 8 பேர் கொண்ட இருக்கைக்கு 26,500 AED (ரூ.4,69,179), 12 பேர் கொண்ட இருக்கைக்கு 38,500 AED (ரூ.6,81,637) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகள் தற்போது இணையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன

கருத்துகள் இல்லை: