செவ்வாய், 24 அக்டோபர், 2017

ஆந்திரா .. பட்டப்பகலில் தெருவில் வன்புணர்வு .. காப்பாற்ற யாரும் முன்வரவில்லை .விடியோ எடுத்தனர் .


மாலைமலர் :ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரில் நடைபாதையில் வசிக்கும் பெண்ணை பட்டப்பகலில் குடிபோதையில் ஒரு காமுகன் கற்பழிக்கும் காட்சியை கண்டும் காணாமல் பொதுமக்கள் கடந்து சென்றனர். பட்டப்பகலில் நடைபாதையில் கற்பழிக்கப்பட்ட பெண்: கண்டும் காணாமல் போன பொதுமக்கள்" / ஐதரபாத்: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். வாழாவெட்டியாக வந்த அவரை ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்ததால் விசாகப்பட்டினம் நகரில் உள்ள புதிய ரெயில்வே காலனியை ஒட்டியுள்ள சாலையோர நடைபாதையில் கடந்த ஒருமாத காலமாக இவர் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் வேளையில் மரத்தடி நிழலில் அந்தப் பெண் படுத்திருந்தபோது, அவ்வழியாக மிதமிஞ்சிய குடிபோதையில் சென்ற ஒரு காமுகன், நடுத்தெரு என்றும் பட்டப்பகல் என்றும் பாராமால் உறங்கிகொண்டிருந்த பெண்ணின் ஆடைகளை விலக்கிவிட்டு மிருகத்தைவிட கேவலமான முறையில் அந்தப் பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க தொடங்கினான்.


மிகவும் பரபரப்பான அந்த சாலை வழியாக கடந்துசென்ற சிலர் இந்த கொடூரத்தை பார்த்தும், கண்டும் காணாததுபோல் தானுண்டு, தனது வேலையுண்டு என்று போய் கொண்டிருந்தனர். அந்த பகுதியை ஒரு ஆட்டோவில் கடந்துசென்ற ஒருவர் மட்டும், அந்தக் கொடுமையை தனது கைபேசியில் வீடியோவாக பதிவு செய்தார்.

அந்த காட்சியுடன் அருகாமையில் உள்ள காவல் நிலையத்துக்கு புகார் அளித்ததையடுத்து, விரைந்துவந்த போலீசார் அந்த காமுகனை கைது செய்தனர்.கைதான கஞ்சி சிவா(21) என்னும் அந்நபர் இதற்கு முன்னர் சிறுவயதிலேயே திருட்டு வழக்கில் கைதாகி, சிறார் காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்தவன் என தெரியவந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாகப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கைதான குற்றவாளியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு விசாகப்பட்டினம் நகர உதவி போலீஸ் கமிஷனர் நரசிம்ம மூர்த்தி இன்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: