செவ்வாய், 24 அக்டோபர், 2017

GST… GST… போலோ பாரத்…மாதாகி ஜெ…! ம.க.இ.க புதிய பாடல் !


வினவு :கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது ஆளும் வர்க்கங்கள் மோடியை மீட்பராக முன்னிறுத்தின. மூன்றாண்டு ஆட்சிக்கு பின்னர் இந்த மீட்பரால் நாட்டு மக்கள் அடைந்து துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. மோடியின் பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற பொருளாதாரத் தாக்குதல்களால் அனைத்து தரப்பு மக்களும் மோடி மீதும் பாஜக ஆட்சியின் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். மோடியின் கோட்டையாக சொல்லப்பட்ட குஜராத்திலேயே லட்சக்கணக்கான வணிகர்கள் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து போராட்டம் நடத்தினர். இன்று மோடிக்கும், அமித்ஷாவுக்கும் கடும் எதிர்ப்பு அங்கே நிலவுகிறது. மெரினா போராட்டத்திற்கு பின்னர் பாஜக -விற்கு ஜென்மப் பகையாளியாக உள்ள தமிழகத்தில் ஜி.எஸ்.டி. எதிர்ப்பு பற்றி சொல்லத் தேவையில்லை. மெர்சல் படத்தில் ஒருவரியை நீக்கச் சொல்லி வாய்திறந்த பாஜக -வுக்கு எல்லா தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் தங்களின் காலுக்கு கீழே தாங்களே குழிதோண்டும் வேலையை தமிழக பாஜக மேலும் தீவிரமாக செய்து கொண்டிருக்கிறது. பணமதிப்பழிப்பின் போது வரிசையில் நின்று இறந்தார்கள் மக்கள். ஜி.எஸ்.டியின் போது வாழ்வை இழந்து விட்டு எங்கு போவது என்று தவிக்கிறார்கள். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இந்த பாடல் உழைக்கும் மக்களின் குரலாய் முழங்குகிறது. பாடலை பருங்கள்… நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துகள் இல்லை: