திங்கள், 19 ஜூன், 2017

கோபாலகிருஷ்ண காந்தி குடியரசு தலைவர் பதிவிக்கு எதிர்கட்சி கூட்டணி சார்பில்?

எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்!ஜனாதிபதி வேட்பாளராக, பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை பாஜக அறிவித்துள்ளது ஜூன் 19ஆம் தேதி இன்று, ராம்நாத் கோவிந்த், ஆர்.எஸ்.எஸ்-இன் ஒரு பிரிவான தலித் மோர்சா தலைவராகவும் பணி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக-வுக்கு எதிராகத் தலித் அமைப்புகள் போராடி வருவதாலும், மாட்டுக்கறி பிரச்னைகள் தலைதூக்கியிருப்பதாலும், எதிர்க்கட்சிகளைச் சமாளிக்கும் வகையில், ஜனாதிபதி வேட்பாளராகத் தலித் இனத்தைச் சேர்ந்தவரை நியமித்துள்ளது பாஜக.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி சமீபத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டினார். அதில் 17 கட்சிகள் கலந்து கொண்ட கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தலில் நமது வேட்பாளராகக் கோபால கிருஷ்ணா காந்தியை பரிசீலனை செய்கிறோம் என்றதும், பெரும்பாலானக கட்சித்தலைவர்கள்கோபால கிருஷ்ணா காந்தியை வரவேற்றுள்ளார்கள்.

கோபால கிருஷ்ணா காந்தி ஐ.ஏ.எஸ், அதிகாரியாக இருந்து மக்களுக்குச் சேவை செய்துள்ளவர். மேற்கு வங்காளத்தில் ஆளுநராகப் பதவி வகித்தவர். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் தொடர்ந்து நட்புடன் இருப்பவர். ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்குப் போட்டியாக, காங்கிரஸ் தலைமையிலான 17 கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளராக, மகாத்மா காந்தியின் பேரன், கோபால கிருஷ்ணா காந்தியை அதிகாரப்பூர்வமாக முடிவுசெய்து அறிவிக்கவுள்ளது ஜூன் 22ஆம் தேதி அன்று, என்கிறார்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள்  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: