kavkavikavi
ஊராட்சியில் கட்டிட அனுமதி சான்று வாங்குவதற்க்காக
போயிருந்தேன்.. சின்னதா 600 சதுர அடியில் வீடு. ஆய்வாளர் ஏற இறங்க பார்த்தார்.. ஒரு செல் நம்பரை கொடுத்து,இவர் கட்டிட பொறியாளர், இவரைப் பார்த்துட்டு வாங்க என்றார்..
"ஏன்" என்றேன்.. அவர் உங்களது டாக்குமெண்ட்களை சரி செய்து தருவார் என்றார்..
"ஐயா., ஒரு நிமிடம்.. எல்லாம் சரியாக உள்ளது.. மேலும்,
ஐந்து பைசா லஞ்சமாக கொடுக்க மாட்டேன்" என்றேன்..
அப்ளிகேஷனை வாங்கிக் கொண்டு, "பணத்தை செலுத்திவிட்டு ஒரு வாரம் கழித்து வாருங்கள்" என்றார்..
ஒரு வாரத்தில் ஆரம்பித்து 37 முறை நகராட்சிக்கு சென்று வந்துவிட்டேன்.,
38 முறையாக சென்றேன், ஆய்வாளர் என்னை நிமிர்ந்து பார்த்தார்.,
"ஐயா, ஒரு வாரம் கழித்து வரட்டுங்களா" என்றேன் முந்திக் கொண்டு, வேறு வழியே இல்லாமல், சான்றை எடுத்து நீட்டினார்..
வாங்கிக் கொண்டு, ஒரு டிவிடியை அவரிடம் கொடுத்தேன்..
"என்ன இது" என்றார்...
"நான் அப்ளிகேஷன் கொடுத்தது முதல், சென்றமுறை வந்தது வரை, நமக்குள் நடந்த உரையாடல்கள் உள்ளது... நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்" என்றேன்..
"சார்" என்று எழுந்தார்.. கண்டுக்காமல் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்..
கொசுறு:
7600 ரூபாய் கட்டி, ஊராட்சியில் ரசீது பெற்றுக் கொண்டேன்., அவர் கூறிய கட்டிட பொறியாளர், சான்று பெற்றுத்தர நாற்பதாயிரம் ரூபாய் கேட்டார்..
ஏமாந்தவர் எத்தனைப் பேரோ..
இனி அவர் தவறிழைக்க மாட்டார் என நினைக்கிறேன்.,மீறினால், எனக்கு குருவாக அடுத்தவன் பலமான ஆப்பாக செருகுவான்..
3500க்கு வாங்கின கேமரா போன் நல்லா வேலை செய்யுது...
இரா.சாம்பசிவம் கிராமத்து இளைஞன்
அவர்களின் உண்மை பதிவிது....
நல்லாதான் இருக்கு இதுவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக